உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்

0
791
inbound4601516960875692876

உதட்டிலே புன்முறுவல்
உள்ளத்திலே பூரிப்பு
உறவென்று உரிமையோடு
உயிரோடு கலந்து விட்டேன்
உன்னோடு நானிருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்


கண்ணைப் பறித்து
கனவோடு சிதைத்து
காலமெல்லாம் காத்திருந்தேன்
காதலுக்கு அது வரமே
உன்னோடு நானிருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்

தீராத சோகங்களும்
தீருமே நீ தந்த ஆறுதல்கள்
ஆயிரம் ஆசைகளோடு
ஆறுயிரே வேண்டுகிறேன்
இன்பம் பொங்கி வர
உன்னோடு நானிருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments