சில்லென்ற காற்று எனை வருட என் மனம் லேசாகி கால்கள் நடைபோடுகிறது சாலையோரம். காணும் கட்சிகளை கண்கள் படமெடுக்க ரசித்தபடி நடந்து போன ஒரு நிமிடம் கால்கள் அசைவற்று நின்றேன். எதிரே ஓர் அழகான சிறிய பெண் பிள்ளை அவள் கைகளில் கொய்யாப் பழங்கள். அருகிலும் ஒரு பை நிறைய கொய்யாப்பழங்கள்.
கொய்யாப்பழம்…..
கொய்யாப்பழம்…..
எனக் கூவிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். கொய்யப்பழம் வாங்க வந்தவர் போல் தெரியவில்லை. அவளுக்கும் அவர் தொடுகையின் அர்த்தங்கள் புரிய வாய்ப்பில்லை சின்ன பிஞ்சவள். கடையை நோக்கி நான் வருவதை கண்டு விலகிப் போனான். அந்த பிஞ்சிடம் நான்கு கொய்யாப் பழங்களை வாங்கிவிட்டு
“உன் வீடு எங்கம்மா??? அப்பா அம்மா????” அதற்கு அவள் அளித்த பதில் எனை ஆச்சரியமூட்டியது.
பித்தமிழந்து பத்து மாதம் சுமந்தவளை நான் சுமக்க வைத்துவிட்டு தந்தையவன் ஓடினான் என்றாள். அவளின் வீடு செல்ல ஆர்வம் தூண்ட அவளுடன் நடந்தேன்.அது ஒரு குடிசை வீடு வேலிகள் வாய் பிளந்து வீதி பார்க்க கதவுகள் காற்றிலாட தூணில் கட்டுண்டு கிடந்தாள் அன்னை.
தண்ணீர் சாப்பாடு எல்லாம் அவளருகில் சிந்திக்கிடந்தது. புரியாமல் விழி முழிக்க அந்த பிஞ்சு சொன்னாள் நான் தான் கட்டி வைத்தேன் என்றாள். அவர்களின் நிலமை புரிந்தது. என் நண்பியுடன் தொடர்பு கொண்டு அவர்களை ஒரு காப்பகத்தில் அனுமதிக்க முயன்று வெற்றியும் கண்டேன்.
என் ஆச்சரியம் எல்லாம் பத்து வயசு பிஞ்சு தன் பெற்றவளை சுமந்த கதை தான்…
Like