பிஞ்சு
நிலவே
உன்னை
கொஞ்சும்
போது சுகமே
என் வைரமே
என்னை
அம்மா என
அழைத்த
முதல் பரிசமே
உலகமே நீயடி
என் கண்ணே
என் உதிரத்தை
உணவாக்கி
என் உயிரை
காணிக்கையாக்கி
தவமாய் பெற்ற
வரமே
உன் சினுங்கலில்
தவித்து போவேன்
உன் அழுகையில்
உன் அசைவினை
அறிந்து
நடந்திடுவேன்
கண் அசைத்து
என் கவலை
மறக்க செய்வாய்
என் பொன்மணியே
உன் மொழிதான்
எனக்கு
ஆறுதல்
என் குழந்தையே..
வெறொன்றும்
வேண்டாம்
இவ்வுலகிலே
நீ மட்டும் போதும்
என் அருகிலே
என் கனவே
உன்னை
அணைப்பதில் தான்
என் சந்தோசமே.