எழுத்தாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

0
468

தற்போது நீர்மை வலைத்தளமானது உலகெங்கிலும் வாழும் எண்ணற்ற வாசகர்கள் மத்தியில் போய்ச்சேர்ந்திருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை அதனை கொண்டு சேர்பதற்கு பெரும் காரணமாயமைந்த படைப்புக்களின் சொந்தக்காரர்களான எழுத்தாளர்களாகிய உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.  எழுத்தாளர்களின் முயற்சியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் அத்தகைய எழுத்தாளர் கணக்கின் புதிய Update செய்யப்பட்ட அம்சங்களை எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.

எழுத்தாளர்கள் தனது படைப்பினை வலைத்தளத்தில் பதிவிடும்போது  படைப்புக்கள் நிலுவையிலிருந்து பின்னர் நீர்மை வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படுவதற்கு பதிலாக தற்போது நேரடியாகவே தங்கள் படைப்பினை வாசகர்களுக்கு உடனே பதிவிட முடியும்.

* இச்சலுகையானது தற்போது குறிப்பிட்ட எழுத்தாளர்கள் கேட்டுக்கொண்டதற்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட சில எழுத்தாளர்களுக்கே வழங்கப்படுகின்றது. பிற எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தாளர் கணக்கினை அப்டேட் செய்ய விரும்பினால் எமது குழுவினரை தொடர்பு கொள்ள முடியும்.

எங்களோடு தொடர்ந்து பயணிக்கும் எங்கள் எழுத்தாளர்களாகிய உங்களை சிறப்பிப்பதில் சலுகைகள் வழங்குவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகின்றோம்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments