ஏன் வந்தாயோ

0
864
pray-for-the-world-coronavirus-concept-vector

வௌவால் சூப்பினால் வந்தாயோ
ஆய்வு கூடத்திலிருந்து வந்தயோ
சிந்தமெல்லாம் உன் நினைவுடன் கண்ணீரை
சிந்த வைக்க வந்தாயோ

சாதி, இன, மத பிளவுகளை
சமப்படுத்த வந்தாயோ
மனித அகங்காரத்தை
மட்டிட வந்தயோ


கூத்து கும்மாளத்தை
குறைக்க வந்தாயோ
ஈமானின் பாதியை போதிக்க
சீனாவிலிருந்து வந்தாயோ

தகராறு சண்டைகளை
தவிர்க்க வந்தாயோ
குடும்ப இடைவெளியைக்
குறைக்க வந்தாயோ

பட்டம் பதவிகளைத் தகர்த்து
பரிதவித்திட செய்ய வந்தாயோ
செல்வத்தை கட்டிக்காத்த மனிதனை
செல்லாக் காசாக்கிட வந்தாயோ


சிந்திக்க நேரத்தைத் தந்திட வந்தாயோ
கடுகளவும் இல்லா உன்னைக் கண்டு
கலங்கிட செய்ய வந்தாயோ
மரண பயத்தைக் காட்டி
மிரட்டிட வந்தாயோ

எளிமையான வாழ்வை
எடுத்துக்காட்ட வந்தாயோ
உதவிடும் மனப்பாங்காங்கை
உள்ளத்திலிட வந்தாயோ

உணர்ந்து விட்டோம் ‘கொரோனா’வே
மனம் திருந்தி விட்டோம்
வழி தவற மாட்டோம் இனி
வழியனுப்பி வைக்கிறோம்
விடைபெற்றுக்கொள் ‘கொரோனா’வே

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments