ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

0
2458
inbound8308180205877422911

கொள்ளை,பகை,காமம் கொண்ட
கொலைகளையும் அழித்து
தடையின்றி சாதனைகள் பல படைக்க
தக்க வழிவகுப்போம்

போதையால் படும் அவஸ்தை போதும் என்று
போதனைகள் பல செய்து
குடி அதனை அழித்து
குடி மகிழ கரம் கொடுப்போம்

ஏழைக்கு ஏணியாய் கல்வியை புகட்டி
ஏந்தும் குடும்பமதை காக்கச் செய்து
அவணியிலே அவர்களும்
அவலமின்றி வாழ்ந்திட துயர்துடைப்போம்

ஊழல்களை கண்டொழித்து
ஊக்கமதை அளித்து ஆக்கம் பல படைக்க
நியாயம்,நீதி,நேர்மை
நிஜங்கள் காண பாடுபடுவோம்


சத்தியத்தை நிலை நாட்டி
சமத்துவத்தை ஓங்கச் செய்து
சாதிமத பேதங்களை வேரோடு விட்டொழித்து
சமாதானத்தை வளர்த்திடுவோம்

நம் நாட்டவர்க்கு ஏன்? வெளிநாடு
கூடி நம் நாட்டில் தொழிற்சாலை பல அமைத்து
கஷ்டமேனும் இஷ்டமுடன்
கடனின்றி நம் நாட்டில் மகிழ்வுடனே வாழ்ந்திடுவோம்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments