உப்பு கொண்ட உன்னத காற்று
உதடுகளை வருடிச் செல்ல
அவள் காந்த விழிகளில்
குழந்தை தனம் குடியிருக்கிறது.
கரையை முத்தமிடும் அலைகள்
கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன
என்னவளின் பஞ்சு பாதங்களை
நனைக்க இயலாமையால்
மணல் தோண்டும் நண்டுகளும்
விழி உயர்த்தி பார்க்கின்றன
இவள் கடல் கன்னி யென எண்ணி
நம்மை விட
அழகி ஒருத்தி இருக்கிறாள் என
நிலவும் கோபித்து விட்டது போல
ஆறு மணி ஆகியும் இருட்டவில்லை
இடைவெளி இல்லாமல் பேசினாலும்
வெட்டி விட்டு மறையும் மின்னலாய்
ஒரு புன்னகையை அடிக்கடி வீசுகிறாள்
ஐஸ் வண்டி நோக்கி
சிறு பிள்ளை போல் ஓடுகிறாள்
தன் வயதையும் உணராத குழந்தை உள்ளம்
ஊன்றி இருந்த கையை எடுத்துவிட்டு
மணல்களை உதறி விட்டு
கரையோரம் அவள் கை பிடித்து
நனைந்து கொண்டே நடக்கிறேன்
கடல் அலையில் இல்லை
அவள் காதல் மழையில்
Superb….
😊 good