சஹானா அவள்தான் இந்த கதையின் கதாநாயகி
எப்பொழுதும் சஹானா அவளைப் பற்றி நினைப்பது என்னவென்றால் அவள் அதிஷ்டமிழந்தவள் இதுவரையில் அவள் வாழ்க்கையில் எதுவித சந்தோஷங்களுக்கும் இடமிருந்ததே இல்லை எந்த கெட்ட விஷயங்களுக்கும் அவளது துரதிஷ்டம்தான் காரணமென அவளை சுற்றி இருந்தவர்களின் கைகள் அவள் பக்கமே நீண்டன இதனாலயே எவ்வித நல்ல,கெட்ட காரியங்களிலும் கலந்து கொள்ள மாட்டாள்
ஆரம்பத்துல அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் போக போக அதுவே அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகி விட்டது
காலங்கள் கடந்தன இப்பொழுது அவளொரு டீன்ஏஜ் கேர்ள் வேலைக்கு செல்லும் ஒரு பெண் ஆனால் அவள் அதிஷ்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை
அன்று டிசம்பர் 20 ஊரே பரபரப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாட தயாராகி கொண்டு இருந்தது ஒவ்வொரு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது ப(b)ஸாரே ரொம்ப பி(b)ஸியாக இருந்தது
சரியாக கிறிஸ்துமஸ்ஸிற்கு 4 நாட்களே இருந்த நிலையில் சஹானாவின் ஆஃபிஸில் சிறியதொரு சுற்றுலா அர்ரெஞ்ச் செய்திருந்தனர் இந்த தடவை அவளும் அதில் கலந்து கொண்டிருந்தாள்
பல நாள் துன்பங்களுக்குப் பின் இது அவளுக்கு ஆறுதலாக இருக்கும் என கருதி நன்றாக எஞ்ஜாய் செய்ய காத்திருந்தாள் பயணமும் தொடங்கியது.தீடிரென சடர்ன் ஆ ஒரு ப்(b)ரேக் வேறெதுவுமில்லை வாகனத்தின் டயர்தான் பஞ்சர் அவளது அதிஷ்டம் வேலை செய்கின்றது என மனதுக்குள் எண்ணி இலேசாக சிரித்துக்கொண்டாள்.வாகனத்தை விட்டு எல்லோரும் கீழே இறங்கினர்,அது ஒரு ஒற்றையடி காட்டுப்பாதை அவ்வழியில் வாகன போக்குவரத்து அவ்வளவாக இல்லை மணிக்கு ஒரு அல்லது நாளுக்கு ஒரு வண்டிதான் செல்லும் மணி மதியம் 2 தாண்டியது எப்படியும் உதவி கிடைக்க விடியும் வரை காத்திருக்க வேண்டும், இல்லையென்றால் அடுத்த வண்டி வரும் வரை காத்திருக்க வேண்டும்.எல்லோரும் அப்பாதை ஓரமே இரவு தங்கலாம் என முடிவெடுக்க அதற்கு உண்டான டெண்ட் களை அமைக்க ஆரம்பித்தனர்.
சஹானா சுற்றிப் பார்த்தாள் “அடடே! வீவ் எவ்வளவு சூப்பரா இருக்கு இத கேப்ச்சர் பன்னா நல்லா இருக்குமே” என்று மனதுக்குள் எண்ணிய படி நண்பர்களிடம் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து தனியாக என்ஜாய் பண்ண ஆரம்பித்தால்.அப்படியே மெதுவாக காட்டிற்குள் சென்றாள் மிகவும் அமைதியான சூழல், எங்கும் சுற்றி பச்சை நிறம், பறவைகளின் சப்தம் மியூஸிக் அல்லா மெல்லிசையாக; சற்று நேரம் அவளை அவளே மெய்மறந்து இயற்கையொடு இயற்கையாய் கலந்து விட்டாள். சற்று தூரம் சென்று திரம்பியவளுக்கு வந்த வழி எதுவென்றே மறந்து விட்டது சுற்றி எல்லாமும் ஒரே போல் தோற்றமளித்தது.மணி 5 ஐ தாண்டியது இன்னும் சற்று நேரத்தில் இருட்டி விடும் எப்படியாவது வெளியேற வேண்டுமென வழியைத்தேட ஆரம்பித்தாள் ஆனால் அவளால் வழியை கண்டுபிடிக்க முடியவில்லை.சூரியன் மறைந்து மெது மெதுவாக நிலா எட்டிப்பார்த்தது வானத்தில் சோர்ந்து போன அவள் காட்டினுள்ளே தங்க முடிவெடுத்தால்.சற்று தூரத்தில் ஒரு பாலடைந்த கட்டிடம் அவள் கண்ணுக்கு தெரிந்தது இதுதான் தங்க சரியான இடம் என நினைத்தவள் அக்கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்;உள்ளே மெதுவாக அடியெடுத்து வைத்தாள்;உள்ளே சென்றவளுக்கு பெரும் ஆச்சரியம்!அவள் உள்ளே பார்த்த காட்சி அப்படி
அது பாலடைந்த கட்டிடம் அல்ல அங்கே அவள் பல மனிதர்களை பார்த்தாள் ஆண்,பெண் என இருபாலாரும் அங்கிருந்தனர் அது பார்க்க ஒரு ஹாஸ்டல் அமைப்பில் இருந்தது மற்றும் அங்கிருந்த அனைவரும் வெளிநாட்டவர்கள்.அன்று அங்கே அவள் பார்த்த காட்சி அவளை தூக்கி வாரிப்போட்டது
தொடரும்……..