கனவும் காதலியும்

0
690

 

 

 

 

உனக்கு கடைசிவரை புரியவேயில்லை
உன் கவலைகள் என்னை கஷ்டப்படுத்தும் என்பதும்
உன் பிரச்சினைகள் என்னை துன்புறுத்தும் என்பதும்
உன் கண்ணீர் என்னை நோயாளியாக்கிவிடும் என்பதும்
கடைசிவரை உனக்கு புரியவேயில்லை
நான் கேட்டதெல்லாம்
ஒன்றுதான்
அருகாமை
மிகவும் நெருக்கமான அருகாமை
உன் தோள் வளைவில் என் கன்னம் உரசும் அருகாமை
உன் இருகை இறுக்கத்தில் என் முகம் புதைக்கும் அருகாமை
அன்பே தொலைவுகள் என்பது சந்திப்பின் பிற்போடல் அல்ல
நாம் தொலைக்கும் சந்தோஷத்தின்
பிம்பங்கள்
கடைசிவரை என்னிடம் மிஞ்சியிருக்கும் கேள்வி ஒன்றுதான்
உன் கனவுகளை காதலிப்பது போல் ஒருமுறையேனும் என்னை நீ காதலித்தாயா?

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments