குவளயம் கிறுகி
குறையும் என் வாழ்நாளை
குழந்தைக் குறும்புடன்
குறுகியதாய் காலம் கழித்தேன்-அக்
காந்தள் மலர்
கண்களை காணும் வரை
காலன் காட்டிய
காட்சியில் வந்த
கன்னியின் வதனம்
கண்முன்னே கண்டபோது
காணாத இன்பமெல்லாம்
கணப்பொழுதில் கண்டு களித்தேன்
கடிமலர் அவள்
கரிகாலன் நான்
காதலர்களாக கலந்திட்டோம்
கனவில்
களிப்பில் திளைத்து
கவிதையாக கிறுக்கினேன்
கன்னியின் காதலனாக அல்ல
கன்னிக்கவிஞனாக……
காந்தள்னா என்ன?
“செங்காந்தள் அல்லது காந்தள் (Gloriosa superba, இலங்கை வழக்கு: கார்த்திகைப் பூ) என்பது ஒரு காந்தள் பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும்.”
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D
தகவல் பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்