கல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்

1
4512

கல்வியின் முக்கியத்துவமானது ஆரம்பக்காலம்தொட்டு இன்றுவரை சகல தரப்பினர் மத்தியிலும் தேவையானதொன்றாக அமைகின்றது. எதிர்கால சமூகத்தினை வினைத்திறனுடையதாக மாற்றுவற்றுவதற்கு கல்வி நிலையில் அறிவு, திறன், மனப்பாங்கு அடிப்படையில் மாணவர்கள் சிறந்த வளர்ச்சி நிலையினை கற்றல் பாதையில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இருபத்தொராம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு பற்பல மாற்றங்களை அனுபவித்துப் பார்த்து அவற்றின் தீமைகளை அலசி ஆராய்ந்து சரியானவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையும், கட்டாயமும் எழுந்துள்ளது. இதனை நாம் சரியாக மேற்கொண்டாலே இப்பொழுது இளம்பருவத்தை ஏற்றிருக்கும் எமது அடுத்த சந்ததியினருக்கு இத்தகைய மாற்றங்களை எவ்வாறு எதிர்க்கொள்வது, என்பது பற்றி வழிகாட்டும் திறன் எமக்கு ஏற்படும். ஏனெனில் எம்மை நோக்கிய மாற்றங்கள் அவ்வளவு விரைவாகவும் பல பரிணாமங்களிலும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இம்மாற்றங்கள் கல்விச்செல்நெறிகளில் பாரிய தாக்கம் செலுத்துவதால் எமது தலைமுறையினரின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் பல்வேறு முன்னேற்றகரமான அம்சங்கள் புகுத்தப்பட வேண்டியது அவசியமாகும். தனிமனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் முன்னேற்றத்திற்குரிய நம்பரகமான முதலீடாக கல்வி இருப்பதனை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மனிதனுக்கு இயல்பான முக்கிய மூலவளம் கல்வியாகும். முறையான கல்வியானது தனியாளுக்கு முக்கியவளமாகும், பொருளாதார வளமாகவும் அமைகின்றது. கல்வியினூடாக உயர்நிலையினை அடைந்து சமூக ரீதியில் உயர்ந்த பிரஜையாக வேண்டுமெனில் அதற்கு கல்வி அவசியமாகும். இதனாலேயே நாடளாவிய ரீதியில் எதிர்கால கல்வி எனும் எண்ணக்கரு பரந்தளவில் பேசப்பட்டு வருகின்றது.

மனித வாழ்வின் முன்னேற்றம் கற்றலை அடிப்படையாகக் கொண்டே திகழ்கின்றது. “கற்றல் என்பது உயிரி படிப்படையாக நடத்தையில் பொருத்தப்பாட்டை அடைவதாகும்” என்பதை உளவியலாளரான ஸ்கின்னர் கூறுகின்றார். அதாவது தமது செயல், அனுபவம் ஆகியவற்றால் உயிரின் நடத்தையில் ஏற்படும் மெதுவான மற்றும் படிப்படியான மாற்றம் கற்றல் என பொருள் கொள்வது பொருந்தும்.
தற்கால சமூகங்கள் என்றுமில்லாத அளவிற்கு இன்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. அடைந்துகொள்ளும் பயன்பாட்டின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அது மக்களின் நிலைக்குத்தான நகர்விற்கு அளிக்கும் பங்களிப்பு என்பன கல்வியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்வதை அதிகரித்துள்ளது. இதன்காரணமாகவே பாடசாலை கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை மாணவனின் கற்றல் செயற்பாட்டில் பாடப்பொருள் தொடர்பாகவும், கலைத்திட்டம் தொடர்பாகவும் புதிய மாற்றங்கள் அறிமுகமாகின. அவற்றல் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதற்கு இன்றைய கற்றல் பாதை சீர்த்திருத்தப்படுவதோடு, ஒவ்வொரு மாணவனிதும் எதிர்ப்பார்ப்பினை திருப்திபடுத்துவதற்காக கல்வி அமைய வேண்டும் என்பதே யாவரினதும் விருப்பமாகும்.

இன்றையக் காலக்கட்டத்திலே மாணவர்கள் பாடசாலை செல்லும்விதம், பல்கலைக்கழகம் செல்லும்விதம் என்பன அதிகரித்துள்ளன. ஆரம்பத்திலே குறைந்தளவிலே பல்லைக்கழக அனுமதி பெற்றன. இன்று வருடாவருடம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக உயர்செயன்முறையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றமை எம்மால் அவதானிக் முடிகின்றது. இதற்கு காரணம் கல்வியின் முக்கியத்துவம் இன்று எல்லோராலும் உணரப்பட்டமையே என்று கூறலாம். எனவே காலத்திற்கு தகுந்த பொருத்தமான கல்வியினை வழங்க வேண்டியது கல்வித்துறையின் பொருப்பாகும். தற்போதைய கல்வி முறையின் மூலம் உருவாக்கப்படும் பெரும்பாலானோர்களிடம் செயன்முறைத்திறன்கள் போதியளவிலே விருத்தியடைவதாக தெரிவிதில்லை. தற்போதைய கோலமானது பாடவிடயங்களை மனனம் செய்து பரீட்சை வினாத்தாள்களுக்கு பொறிமுறை ரீதியில் விடையளிப்பதற்கு மாணவனை பயிற்றுவிக்கும் ஒரு முறையாகவே அமைந்துள்ளது. நாட்டில் பொருளாதார சமூக தேவைகளுக்கு ஏற்றவாறு தமது அறிவை பிரயோகிக்க கூடிய ஆக்கத்திறன்மிக்க மாணவன் சமுதாயத்தை உருவாக்க கல்விப்புலம் தவறியுள்ளது என்றே கூறலாம்.

நல்ல ஆளுமைமிக்க, விவேகமிக்க, சுயமான, சுதந்திரமான மனிதனை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாகும். ஆனால் இன்றைய கல்விமுறை மாணவனது ஆற்றல் கற்றலுக்கு கற்றல் செயற்பாடு போதிய வாய்ப்பளிக்கின்றதா என்பது கேள்விக்குறியாகும். மாற்றம் என்ற ஒரு எண்ணக்கருவே மாறாதது. இக்கூற்று யாவரும் அறிந்த விடயமே. ஆனால் இவற்றினை கல்வித்துறையே முதலில் மாணவர் மத்தியில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் காலம் மாற்றங்களுக்கு ஏற்ப கல்விமாற்றங்களும் மாற்றியமைக்கப்படும். போதுதான் கல்வி முறைகள் மாணவர்கள் சார்பாக மாற்றியமைக்கப்படும். மாணவர்களின் எதிர்காலத்தை திட்டமிடும் வகையிலேயே கல்விக்கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டுமே தவிர பாரம்பரியத்தை பின்பற்ற முற்படும் போது அது மாணவர்களின் எதிர்காலத்தின் செய்ற்பாடுகளையும் அபிவிருத்தியையும் வலுவிலக்கச் செய்யும் ஒரு சதியாக மாற்றமடையலாம். மாணவர்களை தரம்பிரித்து பாகுப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சகல விதமான நிலையில் காணப்படும் மாணவர்களையும் அவரவர்களுக்குரிய திறனடிப்படையில் முன்னேற்றம் காண்பதற்கான பாதைகள் விரிவாக்குவதே எமது நாட்டின் எதிர்கால கல்வி முறைகளாக பின்பற்ற வேண்டியவையாக காணப்பட வேண்டும். ஆனால் தற்போதைய நிலைப்பாடு அவ்வாறு உள்ளதா என்பதுபற்றி சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இன்று நாடளாவிய ரீதியில் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்ட நிலையிலே மாணவர்கள் சுதந்திரமாக கற்றல் செயற்பாட்டில் ஈடுபடவும், தனது திறனை விருத்தி செய்யக்கூடியவரான துறைகளை உயரத்தரக்கற்றல் செயற்பாட்டில் பெற்றுக்கொள்வதற்கும் சமமான வாய்ப்பு மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளனவா, அவ்வாறு தெரிவு செய்யப்படும் துறைமூலமாக எதிர்காலத்தில் கல்விநிலைகேற்ற தொழில்வாய்ப்பினை பெறமுடியுமா, பொருத்தமற்ற செயற்பாட்டில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் மாணவனுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் எவை, அவை எவ்வாறு மாணவனின் இலட்சியத்தினை பாதிக்கும் என்ற பல கேள்விகள் எம்மில் எழுகின்றன. இவை வினாக்களாக வெறும் வினாக்களாக முடக்கப்படாமல் கல்வித்துறையோடு தொடர்புடைய நாம் ஒவ்வொருவரும் இதற்காக நடைமுறை அம்சங்களோடு இணைந்தவிதத்தில் விடைகாண முயலவேண்டும்.

Source : ஏ.எஸ்.எம்.தாஹிர், விடுகைவருடம் – கிழக்குப் பல்கலைக்கழகம்

முந்தைய கட்டுரைCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு? அறிவோம்! தெளிவோம்!
அடுத்த கட்டுரைமென்டல் ப்ரேக் – Mental Outbreak
அருள்நேசன் அஜய்
சி.அருள்நேசன் ஆகிய நான் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் சிறப்புகற்கை இறுதியாண்டு மாணவன். என்னுடைய பள்ளி வாழ்க்கை முதல் கட்டுரை மற்றும் ஊடகம், ஏனைய இதர செயற்பாடுகளில் அதிக அக்கறைக் கொண்டதன் காரணமாகவும் எமது சமூகம் கல்வியால் உயர வேண்டும் என்ற நிலையில் இதுவரையிலும் இலங்கையின் அனைத்து தமிழ் தேசிய பத்திரிகைகள் மற்றும் பிராந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எனது கட்டுரை ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சுமார் 120 மேற்பட்ட கட்டுரைகள் அரசியல், கல்வியியல், சமூகம், மலையகம், பொதுவான விடயங்கள் என்ற வகைகளுக்குள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்பெரும் வகையில் கல்வியியல் கருத்துக்கோவை என்ற நூலை வெளியிட்டேன். மேலும் பல ஆக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். பல மாவட்டங்களில் பாலியல் கல்வி, சிறுவர் உரிமைகள், தொழில் விருத்தி வழிகாட்டல், பெற்றோர்கல்வி, மாணவர் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் செயற்பாடுகள் என்னால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நன்றி
4 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mohamed Faisal
Mohamed Faisal
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

super