காதல் காதல்

3
589
20201117_172148-98b5f285

 

 

 

 

 

 

நீ எனக்கு நிழலாய் இருப்பாய் என்று நினைத்தேன்
ஆனால்

இருளை மட்டுமே பரிசாக தந்தாய்….

நான் சுவாசிக்கும் மூச்சாக இருப்பாய் என்று நினைத்தேன்
ஆனால்

என் சுவாசத்தையே எடுத்துச் சென்றாய்….

இரு விழிகளாய் இருப்பாய் என்று நினைத்தேன்
ஆனால்

கடைசியில் கண்ணீரை மட்டுமே தந்தாய்….

என் இதயமாக மாறுவாய் என்று நினைத்தேன்
ஆனால்

என் இதயத்தையே தகர்த்து விட்டு சென்றாய்…..

என் உயிராய் என்றும் இருப்பாய் என்று நினைத்தேன்
ஆனால்

என் உயிரை பறித்துச் சென்றாய்….

நான் உன்னை காதல் செய்தது பாவமா???
நீ என் வாழ்வில் வந்தது சாபமா???

எனக்கு பதில் தெரியவில்லை

கண்களை மூடிக் கொண்டேன் உன்னை பார்க்கக் கூடாது என்று
ஆனால்

கனவிலும் நீ தானடா….

 

 

 

 

4.3 3 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
3 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Meerashahib Mohammed Atheef
Meerashahib Mohammed Atheef
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

👌

Felishta Mathuvanthi
Felishta Mathuvanthi
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Excellent

Meerashahib Mohammed Atheef
Meerashahib Mohammed Atheef
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

s