கார்கால மலர்கள்

0
123

கார்காலம் மலர்கள்
கார்காலம் மலரே ! கார்காலம் மலரே !
கனிவான மெல்லிய இதழே!
கமுழும் மெல்லிய மலர்களே!
நதிகரையோரத்திலே அழகாய் நீ செவ்விதழ் விரித்து சிரித்திருப்பாய்!
மேனியில் அணியும் இனிய மலரை
முத்துப்போல் தென்படுவாய் உள்ளத்தில்!
விழித்திருக்கும் என்மனதை தேனாக மலர்ந்திடவாய் கவி மொழியே!
சிலம்பின் இலக்கிய மொழியல்வா!
ஊற்றாக தோன்றியவள் நீயல்லவா!
குந்தலின் தவழம் இளம் மலரே!
மனக்குதே என்னை தவிக்கிறதே! நெஞ்சம்! வாழ்வியல் இளம்மலரே!
காதல் செல்லும் கவிதைகளை
கம்பன் சொல்லும் கவியல்லவா !
சிலம்பின் சிறந்த உதிரும் மலரே!
கவிதீட்டி கண்ணழகிய ஓளிமலரே!
ஆடவனின் மணிமகுடமாய் திகழும்
சிலம்போசை பொற்காவிம் நின்றதே!

காளிதாசன் கண்ணதாசன் கவிதையில்
பூத்த பூ, புலந்ததே நெஞ்சங்கள்
காதல் தந்த மொழிகளெல்லம்
இலக்கிய தமிழின் காவியமானதே!

ஆவணி, புரட்டாசி வந்திடுமே!
ஐப்பசி ,கார்த்திகை இணைந்திடுமோ!
கார்கால மலர்கள் தொடங்கிடுமே!
காதலர் கொஞ்சும் காலத்தின் சுவைக்க!

பூக்கள் மலரும் முதலேழுச்சி! காதல் மலர்ந்தால் கவியும் எழுச்சி மனக்குதே! தமிழின் இலக்கிய பேச்சி!தவிக்கின்ற மனது முழுமை மூச்சி!என் இனியவளே!

பொண்மை மலரும் ஒன்றானது
தழுவும் மனங்கள் இணைந்துடுமே!
கவிஞன் எழுதும் காவியங்கள் போற்றும்
கார்கால மலரின் பொழியும் இலக்கியம்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments