கிழக்கு விடிஞ்சிருக்குமோ
கீழ்வானம் சிவந்திருக்குமோ
கண் முழிக்க மனசு இல்ல
கால் அசைக்க தெம்பு இல்ல…
ஆனாலும்,
சேவலோட எழும்பிடுவன்
ஆவலோட- தண்ணி இல்லா
கிணத்தினிலே தண்ணி எடுப்பன்-உடம்பலம்ப!!!
ஓடாத சைக்கிள் ஏறி
ஓடனும்னு மிதிமிதிப்பேன்,
வாழ்க்கை கூட அது போல
விந்தி விந்தி போகும்- போகும் வழியினிலே
சூரியன் என்னைப் பார்த்து வேகும்…
வயலினிலே மனசு வச்சு
வரம்பினிலே கால் பதிச்சா
திட்டுவாரு போடியாரு தாமதமா வந்தேனு!
மண்வெட்டி!! மண்வெட்டி!!
மண்வெட்டி அத எடுத்து -பண்படுத்தும்
நிலத்தினிலே பாதி ஒடம்பு
விழுந்திடுமே…
மத்தியானம் ஆகுமட்டும்
மனுசனுக்கு பயந்த படி
ஒழிச்சி ஒழிச்சு ஓய்வெடுப்பன்
ஒடம்புக்கு அது கேக்காதே!!!
இன்னைக்கோ நாளைக்கோ
இறுதி மூச்சி இழக்கரிக்கும்
எலும்பொடஞ்ச என் ஆத்தா!
உசிருக்கும் கடனுக்கும்..
மாடாய் ஒழச்செடுத்து
கஷ்டப்பட்டு படிக்க வச்சா
பெயிலாகி படிபடிக்கும்
பெரிய மகன் அவனுக்கும்!
இன்னைக்கோ நாளைக்கே
நாடு தள்ளி போக -நாள்
பார்த்து காத்தருக்கும்
பெரிய மகா அவவுக்கும்!
ஓயாம ஒழச்சி கொடுப்பன்
ஒடம்ப கூட பார்க்காம
ஒட்டிப்போன வயிற்றோடு
ஓடோடி வந்திடுவன்
ஒடஞ்சி கிடக்கும் குடிலுக்குள்ளே!!
கவலையிலே நொந்திடுவன்
நிலத்தனிலே படுத்திடுவன்
நாளைக்கு எழுந்திருக்க!!-என்
காலத்தின் கோலம் தான் இதுவோ !
Supperb
Very nice