காலம் மாறியது

0
1131
inbound2865156370122552034

ஜாதகம் பார்த்து பெண்
எடுப்பது அந்தக் காலம்
அந்தஸ்து பார்த்து பெண்
எடுப்பது இந்தக் காலம்

பந்தம் பெரிதென எண்ணும்
அந்தக் காலம்
பணத்தை பெரிதென எண்ணும்
இந்தக் காலம்


சமாதானத்தை வளர்த்திட்ட
அந்தக் காலம்
சண்டையை வளர்த்திட்ட
இந்தக் காலம்

அன்பு கிடைப்பது
அந்தக் காலம்
அன்புக்கு அலைவது
இந்தக் காலம்

ஒற்றுமையே ஓங்கி நின்ற
அந்தக் காலம்
வேற்றுமையே ஓங்கி நிற்கும்
இந்தக் காலம்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments