வெட்டுக்கிளிகளில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. இவை பொதுவாக புல்வெளிகளிலும் வயல்வரப்புக்களிலும் காடுகளிலும் காணப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் கால்களின் முழங்கால் போன்ற பகுதியை மடக்கி தாவி வேகமாக குதிக்கும் தன்மைகொண்டவை. தாய்லாந்து, ஜப்பான் சீனா ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வெட்டுக்கிளிகளும் பிற பூச்சிகளுடன் பறக்கும் புரதங்களாக கருதப்பட்டு உண்ணப்படுகின்றன.
பச்சை நிறம், சாம்பல் நிறத்திலிருந்து பல வண்ணங்களில் இவை காணப்படும். பச்சையும் ஆரஞ்சும் கலந்த நிறத்திலிருக்கும் இந்த வெட்டுக்கிளியின் உடல் சர்க்கஸ் கோமாளிகளின் பல்வண்ண ஒப்பனையை போலிருப்பதால் இப்பெயர் பெற்றது