குறை கூறும் வகையில் அவள்
கூண்டுக்கிளி இல்லை
காண்போர் மனதில் கவி ஊற்றெடுக்க
அவள் பேரழகியுமில்லை
ஆனால் அழகு!
நினைத்ததை பேசுவதால்
திமிருக்காரியாம்?
தவறு அதை தட்டி கேட்டால்
கோவக்காரியாம்?
அளவோடு அன்பு பொழிவதால்
ஆணவக்காரியாம்?
உறவுகள் எனும் “உணர்வு அற்றவை”
அவளுக்கு அளித்த பட்டங்கள்…
கவி சொல்லுவாள்
கதையும் எழுதுவாள்
தினமும் தியானம் செய்வாள்
சில நேரங்களை அன்புக்காக
தியாகம் கூட செய்வாள்
எப்படி தவறி போனாள்
பாரதியின் கவி கண்களிலிருந்து
கண்டிருந்தால்..
பாடியிருப்பான் இவளையும் ஒரு
இதிகாசமாய்…
போகப் பொருள் போல்
நோக்கும் அகிலாத்தாரிடையே
ஒரு அடையாளம் பதிக்க முயல்கிறாள்
இவள் புதுமையானவள்….