சிதறு தேங்காய்

0
805
1001 + ideas for cute wallpapers that bring the summer vibe

 

 

 

 

உள்ளவன் செய்த பாவமாம்
சுக்கு நூறாக வேண்டியே
வானவன் சந்நிதியின் வாசலில்
சுற்றி வலம் வந்து
ஆயிரம் வேண்டுதல்கள் முணுமுணுத்தே
உற்ற பலம் யாவும் ஒருங்கேற்றி
ஐயனே துணையென்று
நானும் அடித்துடைக்க
சிதறிய சில்லுகள் உருண்டோட
ஒன்றல்ல இரண்டல்ல
முண்டியடித்தே கரங்கள் பல
முழுவதுமாய் பிய்த்தெடுக்க
நடப்பதை வியந்தே நானும்
பார்த்தது யாதென்றால்
ஓட்டுச்சில்லில் மீதமின்றி கொறித்தெடுக்கும்
பசி கொண்ட பாமரர் தம்
வயிறாற்றிய என் பாவ விமோட்சகன்
அருவம்..

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments