சோற்று பருக்கை

0
984
photo-1541482492732-6fef23322336

சலனமற்ற சாலை..எந்திர நடையில் ஏகபோகமாய் சிந்தை முழுவதும் அலைமோதும் எதிரகால சொப்பனங்கள்.

சட்டென்று ஓர் சலனம். மூச்சை இழுத்து நிறுத்த வலது கையும் விரைந்து மூக்கை பற்றிக்கொள்ள சொப்பனத்திலிருந்து நிதர்சனமாய் நான். ஆனால் என் பார்வை குவிந்ததோ சுருக்கம் விழுந்த இரட்டை கரம் துலவிய குப்பைத்தொட்டி மீது.


என்னவென்று நிதானிக்கமுன் கசங்கிய வாழையிலையிலிருந்து ஏஞ்சிய சாதத்தை துளியும் சிந்தாமல் உண்டாள் அந்த அம்மா! 

ஒடுங்கிய தேகம் நடுங்கியபடி கடைசிப்பருக்கையை எடுத்து வாயிலிட்டு மென்றவளிடம் ஓடிச் சென்று அருகில் கரம்பற்றி நின்ற என்னை பார்த்த பார்வையில் அத்தனை அர்த்தங்கள் கண்டதும் ஒருகணம் மெய் சிலிர்த்தது. 

“ஏனம்மா இதை உண்கிறீர்?  இது கெட்டுப் போய்விட்டதே” என்ற என் கேள்விக்கு அவளின் ஒற்றைப் பதில் “பசி”.  என் வார்த்தை திக்கிக்கொள்ள “உங்களுக்கு யாரும் இல்லையா அம்மா” என்று ஏக்கமாய் கேட்க ஈர விழிகளுடன் “கணவனை இழந்துவிட்டேன் ஆனால் எனக்கு நான்கு புள்ளைகள் இருக்காங்க மா” என்றாள்  அவள்.

மறுகணமே “அப்புறம் ஏனம்மா இந்த சாப்பாடு” என்று கேட்க “பெத்தவ நான் பாரமா இருக்கிறேன்னு நாலும் சண்டை போடுதுகள். அதுதான் வீட்டைவிட்டு கால் போன போக்கில வந்தேன்..  இந்த உசிரு இருக்கிறவரை பசியும் விடுதில்லை” என்றாள். 

அவளது நிலைகண்டு இதுதான் வாழ்வா என்று மனம் தெக்கிப் போனது.  சட்டென்று என் கைப்பையைத் திறந்து என்னிடமிருந்த நாணயத்தாள்களை அவளிடம் கொடுத்து “என்னால் முடிந்தது” எனக்கூறி நகர்ந்தேன். 

உறவுகளின் தார்ப்பரியம் அறியா சுயநல மானிடர் வாழ்வதால் இது கலியுகமே… 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments