இந்த சாலை
இந்த வெளிச்சம்
இந்த நீ
இந்த நான்
இதே உலகம்
எதுவும் மாறவில்லை
ஆனால் அத்தனையையும்
இந்த கொட்டித் தீர்க்கும் மழை புதுப்பிக்கிறதே
அது மட்டும் எப்படி
கொண்டாடலாம் வா
மழை ஒரு ராட்சசன்
அள்ள அள்ளத் தீராத ராட்சசன்
தேகங்கள் ஒரு இறகென
முன்னிரண்டு கால் விரலில் குழந்தையாய் துள்ளிக் குதித்திடச்செய்யும்
ஜீவனை துளிர்க்கச் செய்யும்
ராட்சசன்
வாயேன்
கவலைப்பட ஆயிரம் இருக்கட்டும்
கொண்டாடித்தீர்க்க நமக்கென மழையை
இஷ்டம் போல் ஏந்திக் கொள்வோமே…!
ஜில்லுக்கட்டி – இது குளிர்மையான நீர்த்திவலைகளை குழந்தைகளுக்கு செல்லமாக சொல்லிக் கொடுக்கும் பொருள் கொண்டது. முக்கியமாக எனது தனிப்பட்ட பேச்சு வழக்கு
Awesome
Super
Super