நல்ல கையால் செய்த வீணை நாதம் தப்புமா
நலம் கெட்டுத்தான் நாசம் என ஆகுமோ
கற்ற வித்தை கல்லாத கல் என மாறுமோ
கண்களில் வெறும் கண்ணீர் தான் மிஞ்சுமோ
விதைத்த விதை மண்ணுள் மடிந்ததோ
வீறு கொண்டு எழு விசை ஒன்று இல்லையோ
தன்மானம் தலைக்கொண்ட தருமத் தமிழனே
தண் பனி மறைத்து பரிதி பகலில் வருவது போல
விடா முயற்சி என்றும் வியக்கும் வெற்றி தரும்
வீட்டிற்குள் முடங்காதே விமர்சனத்தால் துவழாதே
ஏற்றம் தரும் ஏணி உன்னை துணிந்து
ஏழு கடல் தாண்ட விடும் தவிக்காதே தரணியின்
வெற்றித் தனயன் தாழ்மையுள்ள நீ தனி ஒருவனே..!