இண்டைக்கு காலம ஒரு மலையாளப் படம் பார்த்தன். அதில இப்பிடி ஒரு சீன். (தமிழ்நாட்டில நடக்குது) ஒரு அம்மா சீனா போய்ட்டு வந்திருக்கன் எண்டு சொல்ல ஏனுங்கோ எண்டு கேக்க மகள்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாது அதச் சொல்லிக் குடுக்க மகள் கூப்பிட்டவள் எண்டு சொல்லிட்டு போச்சுது மனிசி. என்ன தான் மலையாளப் படத்தில வந்த சீன் எண்டாலும் அதில சொன்னது உண்மை தானே.
அதில சொன்னது போல வெளிநாட்டில இருக்கிற தமிழர்கள்ல கன பேர்ட பிள்ளையள் தாங்கள் தமிழர் தான் எண்டத மறந்து கொண்டே போறத பாக்கலாம். அதப் பாக்கோனும் எண்டா கனக்க ஒண்டும் செய்ய வேணாம். வெளிநாட்டில இருக்கிற சொந்தக்காரர் யாரிண்டையும் பிள்ளையளோட அஞ்சு நிமிடம் கதைச்சுப் பாத்தியள் எண்டாக் காணும். நான் எல்லாரையும் சொல்லேல. பொதுவா சொல்லுறன். என்ன தான் தமிழ்த் தேசத்தில இல்லாட்டியும் வீட்டுக்க எண்டாலும் தமிழனா இருக்க பிள்ளையள பழக்கினா நல்லா இருக்கும்.
வெளிநாட்டில இருக்கிற ஆக்களப் பத்தி சொன்னதால நாங்கள் பெரிய திறம் எண்டில்ல. அவங்களுக்காவது சுத்தி இருக்கிற சூழல் அப்பிடி. இங்க சுத்தி எல்லாம் தமிழனா இருந்தும் அம்மா Mommyஆ தானே இருக்கா😥அண்டைக்கு ஒராள் பெடியன் தமிழ் medium மாறிப் படிக்கப் போறன் எண்டுறான் எப்பிடி சமாளிக்கப் போறானோ தெரியேல எண்டு சொல்லிச்சுது. சரி அவனுக்கு சொற்கள்(Terms) தான் சிக்கல் போல எண்டா அவருக்கு எழுதுறது சிக்கலாம்😠😠அவனச் சொல்லியும் பிழை இல்ல நாம நிம்மதியாப் போன நேசறில கூட இப்ப தமிழ் medium , இங்கிலீஷ் medium எண்டெல்லாம் வந்தா தமிழ் எங்கத்துக்க வாறது. பிறகு எந்த mediumத்துக்கும் விடுங்கோடாப்பா முதல்ல தமிழ்ல எழுதப் பழகினாப் பிறகு. கனபேர் சொன்னது தான் எண்டாலும் நாமளும் போடுவம். ஆங்கிலம் ஒரு மொழியே தவிர அறிவல்ல.
இலங்கையில தமிழ மதிக்கேல எண்டு குதிக்குறம். இந்தக் கலைச் சொற்களுக்கு தமிழாக்கம் எண்டுறத இலங்கையில செஞ்சு முப்பது வருசத்துக்கு மேல. அரச கரும மொழிகள் திணைக்களம் இணையத்தில போடுற பட்டியல்களில தமிழ்ச் சொல் போட இடம் விட்டிருக்கு ஆரும் தமிழாக்கம் பண்ணிக் குடுத்திட்டு போடேல எண்டு சொல்லுவம். அதுக்கு முதல் சொன்னா அசிங்கப்படுத்திப் போடுவாங்கள். அவங்கள் உசாரா எல்லாத்துக்கும் சிங்களச் சொல் உருவாக்குறான். ஏலாக்கட்டம் எண்டா சின்ன மாற்றம் பண்ணிட்டு சிங்கள அகராதில சொருகிடுறான் உதாரணத்துக்கு Laptop எண்டத லபடொப் எண்டு வச்சிருக்கான். நாங்க இது கூடப் பண்ணுறேல.
கன பேர் தமிழ் தமிழ் எண்டுறம் முழுசா ஒரு அஞ்சு நிமிஷம் தனியத் தமிழ்ல கதைக்க விட்டா மூச்சு வாங்கிடும். என்னையும் சேர்த்துத் தான். தமிழ் அழிக்குறாங்கள் எண்டு கன பேர் கூவுறம். அழிக்குறாங்களா இல்ல அழிக்குறமா எண்டது தான் எனக்குச் சந்தேகமாக் கிடக்கு. முதல்ல எங்கட சாப்பாட்ட நாங்கள் கொட்டாம இருப்பம் அதுக்குப் பிறகு அடுத்தவன் தட்டி விடுறதப் பத்திக் கதைப்பம்.
கண்டுகொள்ளாமல் கடந்து போவதும் சாகடிப்பில் சேர்த்தி என்பது என் அபிப்பிராயம். மொழிப்பற்று என்கிறோம். மொழியை வளர்க்கிறோம் என்கிறோம். ஆனால் அவ்வாறான புதிய முயற்சிகளை காணும் போது நம்மில் பலர் கடந்தும் போகிறோம். அவ்வளவுதான்.. இங்கே இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் முழுமையாக ஊக்குவிக்கப்படுகிறதா கொண்டாடப்படுகிறதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். இந்த வலைத்தளத்திலும் எத்தனையோ பேர் எழுதுகின்றோம். ஆனால் உயிர்ப்புடன் இருக்கும் எழுத்தாளர்களே அதை கண்டு கொள்வதில்லை.கருத்துக்கள் பரிமாறப்படும்போதுதான் எழுத்தாளனின் எண்ணம் உயிர்ப்பாகும். அதுதான் எழுத்தாளனின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. இதுதான் கண்டுகொள்ளாமல் கடந்து போவதும் சாகடிப்பில் சேர்த்தி என்பது.
You are right. I agreed… But, we will try our level best.