நல்ல மனம் வாழ்க…

0
1870
Screenshot_20200526-005537_Google

ஊனம் ஒரு குறை என்று
ஊசலாடும் நெஞ்சங்களை
ஊராா் புகழ் போற்றிடவே
ஊக்கமளித்து உயர்த்திடும்
நல்ல மனம் வாழ்க…….

துன்பத்தில் துவளையிலும்
துயரத்தில் ஆழ்கையிலும்
தாேல்விகண்டு தளரயிலும்
தாேள் காெடுக்கும் தாேழமை
நல்ல மனம் வாழ்க……….

ஆசைகள் முடங்கிடவே
ஆதரவின்றி நிற்கையிலே
அன்னை பாேல அரவணைத்து
அன்பு காெண்டு அன்னமிட்ட
நல்ல மனம் வாழ்க……..

கடைசி வரை கைகாெடுக்கும்
கல்வியைக் கற்றிடவே
கல்லுதான் உடைத்தெனினும்
கைகாோ்த்து கரை சாே்த்த
நல்ல மனம் வாழ்க……..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments