நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்….

0
1237

நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்
அப்பேக்க
விபத்து இல்ல
பெற்றோல் இல்ல
தலைகவசமில்ல
வீதிசரியில்ல
சாரதி அனுமதி பத்திரமில்ல

ஒத்தயடி பாதையில
ஒரு குச்சியோட
ஓடுற ரயர் வண்டியாடா

நீள தடியோட
அதன்முனையில
இரண்டு சில்லு பூட்டி
ஓடுற வண்டியாடா

சீகாய் சீவி
சில்லு செய்து
ரீற் ரீற் என
திருப்பிய வண்டியாடா

சைக்கிள் கரியலில
பனங்கொட்டை கடத்தல் வண்டியாடா

இதபாத்துத்தான்
கார் கண்டு பிடிச்சாங்களோ
இருக்கும்…,
நாங்க தடக்கி விழுந்து
மண்ட உடைந்ததைப்பார்து
தலைக்கவசம் கண்டு பிடிச்சாங்களோ
முள்ளு குத்தி
கத்துறத பாத்துத
றோட்போட்டாங்களோ
இருக்கும்…,
நாம மூத்த குடிகளாச்சே…!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments