நாளோட்டம்

2
1043

மாலை நேரம்
மஞ்சள் வெயில் தூறும்
சாலை தோறும் – மந்தை
கூட்டம் போகும்
பொழுது சாயும் – அந்தி
வானம் இருட்டும்
நிலவு தோன்றும் – நம்
உறவு நீளும்
விட்டில் கத்தும்
ஆட்காட்டி சுற்றும்
ஆந்தை அலறும் – நள்
இரவு தொடங்கும்

தூரத்து நாய் ஓலம்
மரங்களின் உரசல் சத்தம்
கேட்கையில் மனம் பதைக்கும்
கண் மூடினால் விடிந்து விடும்
அதிகாலை பிறக்கும் நேரம்
சுற்றத்து ஆலயமணி கேட்கும்
சேவல்கள் வணக்கம் சொல்லும்
அம்மாவின் தேநீரும் எமை எழுப்பும்
சாம்பிராணி வாசமது
புது உத்வேகத்தை அளிக்கும்
கண் திறக்க தெரியும் தாய் முகம்
அந் நாளை நன்றாய் மாற்றிடுமே
சூரியன் உச்சி தொட
அம்மா தந்த பச்சரிசி சாதம்
நாவுக்கு விருந்தளிக்கும்
உடலுக்கு வலுவூட்டும்
மீண்டும்
மாலை நேரம்……

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
வஞ்சிமறவன்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமை நண்பா!
தலைப்புக்கு ஏற்றாற்போல் ஒரு சிறந்த கவிதை
வாழ்த்துக்கள்