ஊரே வெறுத்துப் போனாலும்
சத்தியமாய் ஒரு உறவு
எப்போதும் காத்திருக்கும்
எப்படிப்பட்ட துரோகங்கள் தாண்டியும்
நம்பிக்கையை தாங்கி ஒரு நட்பு
எப்போதும் நம்முடன் இருக்கும்
அன்பையும் பாசத்தையும் இழந்தாலும்
கடுகளவு
கருணை உள்ளம் கொண்ட ஒருவர்
நமக்காக பிரார்த்திப்பார்
எழுமாறாய் ஏற்படும் விபத்துகளும்
ஏற்கனவே விதி தனிலே
எழுதியவைதான்
கோபமும், சாபமும் மேலிட்டாலும்
மரணம் நினைவு வந்து
அவையெல்லாம் மிகைத்துவிடும்
புரியாமை அறியாமை
அவையனைத்தும் தெரியாமலே
எம்முள்ளே புகுந்துவிடும்
வானத்து விண்மீன்களும் பறவைகளும்
எங்கோ
பாதாள தேசம் நோக்கி
பறந்தே போய் விடும்
பூமிக்கு கடல் உலாவருவதும்
பாறைகள் வீதிகளில் பவனி வருவதும்
மழையின்றி பச்சைகள் கருகிப்போவதும்
வழமையாய் மாறிவிடும்
அடுத்தடுத்த ஓலங்களும்
இரத்த வெள்ளமும் ,துர்வாடையும்
எமக்கு அருகிலே கேட்க ஆரம்பித்துவிடும்
இறைவன் அனைத்தும் முடித்துவிட்டு
மனித இனம் மீண்டும் வாழ
நிச்சயமாய் ஒரு மீட்சி தருவான்
அவன் நிச்சயமாக ஒரு மீட்சி தருவான்…!
Subscribe
Please login to comment
0 கருத்துரைகள்
Oldest