நிம்மதியான வாழ்க்கை

0
3161

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. அகம் என்பது மனதை குறிப்பிடுவதாகும் ஆகவே மனதை நிம்மதியடையச் செய்தால் எந்நாளும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என்பது தெட்டத்தெளிவான உண்மை. நீங்கள் விரும்பக்கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால், கிடைத்த வாழ்க்கையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுங்கள். அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும். கிடைத்த வாழ்க்கையை சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும்.

எப்படி சாத்தியப்படும்? மனம் ஒரு குரங்கு எந் நேரமும் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கையில் எப்படி மனதை கட்டுப்படுத்துவது அல்லது நிம்மதியடையச் செய்வது? ஏதோ ஒன்றை செய்யப்போய் ஆப்பிழுத்த குரங்கின் கதையாகிவிட்டால்? ஆம் மிக இலகுவான வழி இருக்க ஏன் பயம்? 
கண்டிப்பாக செய்யக்கூடாத மூன்று விடயங்கள்:

01.மகிழ்ச்சியான வேளையில் வாக்குறுதி கொடுத்தல் 
02.கோபநேரத்தில் இடும் சாபம் 
03.நம்பிக்கை துரோகம் 

நீங்கள் செய்ய வேண்டியது மூன்றே மூன்று செய்கைகள்தான் அவையாவன 

01.புன்னகையுங்கள் அமைதியாக 
02.புன்னகையை ஆயுதமாகக்கொண்டு பிரச்சனையை தீருங்கள். 
03.பிரச்சனைகள் ஏற்படும்போது பெரும்பாலும் அமைதியை கடைப்பிடித்தல் 

ஆகவே புன்னகை ,அமைதி இவற்றின் மூலம் மிக வலிமையான மன நிம்மதியை பெறலாம்.

கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள்.

1. மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள்.

2. நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள்.

3. மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல், உங்களுக்காக வாழ்ந்திடுங்கள்.

4. மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள்.

5. இருப்பதை கொண்டு திருப்தி கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

6. பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தை அதிகப்படுத்துங்கள்.


7. நீங்கள் விரும்பியதை உங்களுடைய நண்பருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

8. உங்களை நேசித்துப் பழகுங்கள்.

9. அடுத்தவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு நீங்கள் சஞ்சலப்படாதீர்கள்.

10. உங்களுடைய இலக்கில் தெளிவாக இருங்கள். அதை அடைய எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

11. மலர்ந்த முகத்துடன் பேசுங்கள்.

12. எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்துப் பழகுங்கள்.

13. கடந்த காலத்தை மறந்து, நிகழ் காலத்தில் வாழப் பழகுங்கள்.

14. நல்ல உடைகளை அணியுங்கள்.

15. கடினமான விஷயங்களை, இலகுவாக்கி செய்யுங்கள்.

16. எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்.

17. சிறு சிறு தோல்விகளை படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. அடுத்தவர்களாக மாற நினைக்காதீர்கள்.

19. எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுய மரியாதையை இழக்காதீர்கள்.

20. அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள்.


முயன்று பாருங்கள் பலன் தெரியும்……

Source : வலைப்பகிர்வுகள்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments