நீர்மையில் எழுத்தாளர்கள்

0
896

நீர்மை வலைத்தளத்தில் ஏன் எழுத வேண்டும்?

எங்கெங்கோ வாழும் எழுத்தாளர்களையும் அதைவிட அதிகமாய் சிதறிக்கிடக்கும் வாசகர்களையும் neermai.com என்ற வலைத்தளம் மூலம் ஒன்றிணைப்பதே எங்களது நீர்மைக்குழுவினரின் அவாவாகும். எந்தவித இலாபத்தையும் கருதாது எழுத்தாளர்களை இலவசமாக அவர்களது எண்ணங்களை பதிவேற்றுவதற்கு களம் அமைத்துக்கொடுத்து அவர்களுக்கென தனிப்பட்ட அங்கீகாரத்தை பல்லாயிர வாசகர்களுக்கு மத்தியில் உருவாக்கச் செய்வதே நீர்மைக்குழுவினரின் நோக்கமாகும்.

நீர்மை வலைத்தளம் சோர்ந்து போயிருக்கும் வாசகர்களை உற்சாகப்படுத்தவும் அவர்களின் திறன்களை போட்டிகள் மூலம் தூண்டவும் புதிய எழுத்தாளர்களை ஒன்றிணைக்கவும் தமிழால் தமிழ் வளர்ப்போம் என்ற நோக்கத்தின் ஆரம்பகட்டமாக நீர்மை இலக்கியத்திருவிழா-2020 என்ற போட்டியினை முதலாவது ஆண்டு பூர்த்தியினை சிறப்பிக்கும் வகையில் ஜுன் மாதம் தொடங்கி வைத்தது. அதில் பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டு போட்டியினை சிறப்பித்தார்கள். இது எங்களை மென்மேலும் இப்பணியினை தொடர ஊக்கப்படுத்துகின்றது.

ஆனாலும் எழுத்தாளர்களாக நீர்மை வலைத்தளத்தில் பதிவு செய்த ஒவ்வொருவரும் வெறுமனே போட்டிக்காக மாத்திரம் தங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்காது இதனை உங்களின் திறமையினை வெளிக்கொணரும் ஒரு களமாக பயன்படுத்த வேண்டும் என்பதனையே நீர்மை வலைத்தளம் விரும்புகின்றது. அவ்வாறு ஆரம்பம் முதல் தற்பொழுது வரை நீர்மையில் தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் நீர்மைக்குழுமம் தெரிவித்துக் கொள்கின்றது.

எழுத்தாளர்கள் போட்டி தொடர்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தீர்கள். உங்கள் அனைவரதும் சாதக, பாதக கருத்துக்களையும் விமர்சனங்களையும் எப்போதும் நீர்மைக்குழுமம் வரவேற்கின்றது. அந்தவகையில் சில விடயங்களை எழுத்தாளர்கள் அறிந்து கொள்வது இனிவரும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன்னரும் தொடர்ந்து படைப்புக்களை பதிப்பிப்பதற்கும் ஒரு வழிகாட்டுவதாக அமையும் என நம்புகின்றோம்.

நீர்மை யாருக்கான வலைத்தளம்?

தனது எண்ணங்களுக்கு களம் கொடுக்க நினைக்கும் எந்த ஒரு படைப்பாளிக்குமே சொந்தமான வலைத்தளமே neermai.com ஆகும்.

நீர்மையில் எழுத்தாளர்கள் ஏன் எழுத வேண்டும்?

01. டிஜிட்டல் வழி தனது படைப்புக்களை காட்சிப்படுத்த விரும்பும் எந்த ஒரு நபரும் தனது பெயர் முதல் தனது ஆர்வம் வரை அறிமுகம் செய்து தனக்கான ப்ரொபைல் ஒன்றினை உருவாக்கி தனது படைப்புக்களை ஒட்டு மொத்தமாக கோர்வைப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அங்கீகாரத்தை நீர்மை வலைத்தளம் வழங்குகின்றது.

02. அனுபவமுள்ள எழுத்தாளர்கள் முதல் ஆர்வமுள்ள புதிய எழுத்தாளர்கள் என அனைவருக்கும் எதுவித பேதமின்றி களம் அமைத்துக்கொடுக்கின்றது.

03. இலகுவாக வாசகர்களால் தனது படைப்புக்களை பதிவிட்டுக் கொள்ளவும் அவ்வாறு பதிவிடுவதில் ஏதும் சிரமங்கள் ஏற்படுமிடத்தில் எந்த ஒரு நேரத்திலும் உதவி புரியக்கூடிய வகையிலான நிர்வாகக்குழுவினரையும் neermai.com கொண்டுள்ளது.

04. எந்தவித கட்டணமுமின்றி படைப்புக்களை உலகின் எங்கெங்கோ வாழும் வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கின்றது.

05. நீர்மை வலைத்தளமானது எழுத்தாளர்களுக்கு ஆர்வத்தையும் பயனையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் பல செயற்திட்டங்களை இப்பொழுது போல் எப்போதும் வரும் காலங்களில் முன்னெடுக்கும். 

நீர்மைக்குழு எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன?

01. உண்மையான ஆர்வத்துடன் படைப்பாளர்கள் எழுதுவதற்கு முன்வர வேண்டும்.

02. போட்டிகள் உற்சாகப்படுத்தவும் புதிய எழுத்தாளர்களை தூண்டவும் நடாத்தப்படுவதே தவிர நீர்மை வலைத்தளத்தின் நோக்கம் படைப்புத்திறனை மேம்படுத்துவதே. இந்நோக்கத்திற்கு எழுத்தாளர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

03. ஓர் எழுத்தாளர் படைப்புக்களை வெறுமனே பதிவிடுவதோடு நின்று விடாது தனது படைப்புக்களை கொண்ட வலைத்தள இணைப்புக்களை ஏனையவர்களுடன் உதாரணத்திற்கு வாட்சப் மற்றும் முகநூல் நண்பர்களுடன் நேரடியாகவோ பிற குழுக்களிலோ தனது ஒவ்வொரு படைப்புக்களையும் பகிர்நது அதற்குரிய பின்னூட்டமிடுதல் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

04. எவ்வாறு ஓர் எழுத்தாளர் தனது படைப்புகளுக்கான விருப்பத்தையும் அபிப்பிராயத்தையும் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றாரோ அவ்வாறே பிற எழுத்தாளர்களின் படைப்புகளின் குறை நிறைகளை தன் அபிப்பிராயங்கள் மூலம் தெளிவுபடுத்த வேண்டும். அது வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கு ஊக்கமாகவும் தனது படைப்புக்களில் எதிர்காலங்களில் மாற்றங்களை கொண்டு வரவும் ஏதுவாக அமையலாம். ஏனெனில் பல அனுபவமிக்க எழுத்தாளர்கள் நீர்மை வலைத்தளத்தில் உள்ளமை அனைவரும் அறிந்ததே.

இந்த டிஜிட்டல் உலகில் வாசிப்பு என்பது தூரப்பட்டுப் போய்விடவில்லை. பரிமாணம் மாத்திரமே மாற்றமடைந்துள்ளது. இன்றைய தலைமுறை இலகுவாக கற்றுக்கொள்கிறது. முந்தைய தலைமுறை அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள முனைகின்றது. வெற்றியும் காண்கின்றது. நீர்மை வலைத்தளம் எந்த காலகட்டத்தில் உள்ள தலைமுறையினருக்கும் களம் மாத்திரமே அமைத்துக்கொடுக்க முடியும். கற்பனைத்திறனை வளப்படுத்துவது ஒவ்வொரு எழுத்தாளரையும் சார்ந்தது. நீர்மை வலைத்தளத்தின் நோக்கத்தை அனைத்து எழுத்தாளர்களும் அறிந்து செயற்படுவது மென்மேலும் உங்களையும் எங்களையும் உற்சாகப்படுத்தவும் தூண்டவும் ஏதுவாக அமையும் என நம்புகின்றோம்.

மேலும் நீர்மை வலைத்தளத்தினைப்பற்றி அறிய விரும்பினால் இந்த இணைப்பைத்தொடர்ந்து வாசிக்கவும் https://neermai.com/எம்மை-பற்றி

நீர்மை வலைத்தளம் தொடர்பில் எழுத்தாளர்களின் எண்ணங்களை, கருத்துக்களை மற்றும் சாதக பாதக விமர்சனங்கள் என அனைத்தையும் எதிர்பார்க்கின்றோம்; வரவேற்கின்றோம். நீங்கள் எப்பொழுதும் +94762660466 என்ற இலக்கத்திற்கு நேரடியாகவோ வாட்சப் மூலமாகவோ அல்லது contact@neermai.com என்ற மின்னஞ்சலிலும் உங்களால் தொடர்பு கொள்ள முடியும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments