நீர்மை இலக்கியக் கொண்டாட்டம் போட்டி முடிவுகள் – ஜுன் 2020

3
1203

நீர்மை வலைத்தளத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கவிதை மற்றும் கதைப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 

பல தரமான ஆக்கங்களுக்கு மத்தியில் இரு வேறுபட்ட பிரிவுகளிலிருந்து சிறந்த படைப்புக்களை தேர்வு செய்த நீர்மைக் குழுமத்தின் நடுவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம். மேலும் படைப்புக்களை வாசித்து ஊக்கப்படுத்திய வாசகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். பரிசு பெறும் போட்டியாளர் விபரங்கள் மற்றும் அவர்களின் படைப்புக்கள்.

கவிதைப் போட்டி

நிஷா ஆதம் (இலங்கை) – ‘என்தாய்’
ஷக்தி பாலன் (கனடா) – ‘மீள்’

கதைப் போட்டி

தாழினி (இந்தியா) – ‘மறப்பதில்லை நெஞ்சே’
வஞ்சி மறவன் (இலங்கை) – ‘கணையாழி’

சிறந்த படைப்பாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள்
01. முரளிதரன்
02. சம்சாத் நௌபா
03. மாந்தாரி
04. சீடன்
05. ஆனியா
06. வானம்பாடி முஜா
07. ஓடைக்கவிஞன்
08. ப்ரியங்கா கமலேஸ்வரன்
09. கவியரசி கலை
10. தமிழி

எழுத்தாளர்களே, உங்கள் படைப்புகளை ஒரு போட்டிக்கென மாத்திரம் தயார்படுத்தாமல் உங்கள் எண்ணங்களை சொல்லும் கருவியாக பயன்படுத்துங்கள். எப்பொழுதும் நீர்மை வலைத்தளம் உங்கள் படைப்புகளுக்கு களம் அமைக்க தயாராக உள்ளது. எழுத்துக்கள் எப்போதும் தேடலையும் திருப்தியையும் தரவேண்டும் எனவே விரும்புகின்றோம். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

நீர்மை வலைத்தளத்தின் அடுத்த போட்டி தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
3 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
வஞ்சிமறவன்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் !

Nisha Atham
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அனைவருக்கும் மிக்க நன்றி☺

ஸ்ரீகர்ஷன்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்….. 🙂🙂🙂