நீ  என்ற ஒற்றைச்சொல்

0
1028

நிசப்தமான என் இரவுகளில் மெல்லிய தூரத்து இசை -நீ

இருள் போர்த்தி இருக்கும் என் இரவுகளில் 
சின்னதாய் மின்னும் தூரத்து நட்சத்திரம் -நீ

தனிமை ஆட்கொள்ளும் என் இரவுகளில் 
கண்ணீரை தாங்கும் தலையணை -நீ

ஞாபகங்களை மீட்டுத் தரும் என் இரவுகளில் 
பசுமையான ஆறுதல் -நீ

கனமான கனவுகள் தோன்றும் என் இரவுகளில் 
நிரந்தரமாக தெரியும் அதிசயம் -நீ

இச்சையின்றி முத்தம் பெற முடியாத என் இரவுகளில் 
நான் இழந்து விட்ட மொத்தமும் -நீ

உயிர் வாழ்வதென்னவோ நான் தான் 
எனை உயிர் வாழச் செய்யும் அத்தனை சொற்களிலும்

மறைந்திருக்கும் அற்புத வார்த்தை நீ என்ற ஒற்றை சொல் தான்….. 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments