நாம் ஒரு பொருளின் மீது பிரயோகிக்கும் விசைக்கு கொடுக்கப்படும் மறு தாக்கங்கள் போல நம்மிடையே கடந்து மிதக்கின்ற மனச் சிந்தனைகளுக்குள்ளேயும் ஓர் தாக்கமானது முடிவாய் கிடைக்கிறது. நேர்ச்சிந்தனைகளை( POSITIVE THINKING ) மனமிடையே மெல்ல அடுக்கி வைத்தோமே ஆனால் அது சார்ந்ததாகவே பதில் விளைவுகள் கிடைக்க பெறுகிறது. அவ்வாறே மறை சிந்தனை ( NEGATIVE THINKING ) தரும் பதில்கள் நிறையவே வேடிக்கையானவை அது தரும் பதில்கள் நாம் நினைத்ததை கடந்தும் நிறையவே மறை பதில்களாக உருவெடுத்து பின்னர் அது நிறைவேற்றப்படுகிறது.
ஆக ஓர் மனிதனின் சிந்தனைகளினூடு கலக்கின்ற எண்ணமானது நடக்க போகிற விடயங்களில் தங்கி இருப்பது யதார்த்தமான ஒன்றே!ஆயிரம் எண்ணங்களின் அலைகளே ஓர் எதிர்கால நிகழ்வுகளின் சங்கமம். கடக்கப்படுகின்ற இந்த நாட்களிலே நிறைய சோகங்கள் , அழுகைகள் , துன்பங்கள் நிறைந்து வழிந்தால் அதையும் சுகமாக கடந்து விட கூடிய பக்குவங்களை நிச்சயமாக அதை பற்றிய நேர்ச் சிந்தனைகள் தரக்கூடும்.
ஓர் மனதுக்குள் நேர்ச்சிந்தனை எழ எழ அங்கு ஆச்சரியமான அலைகள் எழத் தொடங்கும். மாறாய் மறைச் சிந்தனைகள் மறை எண்ணங்களையே செயற்படுத்த தொடங்கும்.
இனி வரப்போகின்ற அழகிய ஒவ்வொரு கணத்தையும் நேராய் நேர்ச்சிந்தனை செறிந்த ஒன்றாய் உங்கள் எண்ணத்தினுள் கட்டமைத்து இயல்பாகவே கடப்பீர்களானால் வரும் காலம் உங்கள் பாதையை நேராய் அமைத்துவிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.