ஒரு மனிதனின் வெற்றி என்பது அவனின் வளர்ச்சியிலிருந்து பிற நபர்களால் கணிக்கப்படுகின்றது. சிலருக்கு அரச வேலையில் செட்டில்ஆகி விட்டாலோ சிலருக்கு தனது பிஸினஸை வெற்றிகரமாக நடாத்தி விட்டாலோ சிலருக்கு தனது சிந்தனைகளை பிறர் மதித்தாலோ போதும். உண்மையில் ஒருவரின் வெற்றி என்பது ஓர் இடத்திலேயே நின்று விடுவதில்லை. அது ஓர் ஊக்கம். மேலும் முன்னேறுவதற்கான ஓர் உந்தல். ஒருவரின் வெற்றி அவர் ஒரு வெற்றியாளர் நான் வெற்றி பெறப் பிறந்தவன் என தன் மனதால் உணர்ந்து விடுவதிலேயே தொடங்கி விடுகின்றது.
ஆனால் அந்த வெற்றியை உரிய நபர்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றார்கள்? எவ்வாறு கொண்டாடுகின்றார்கள்? என்பதே அந்த வெற்றியாளர்களை மக்கள் அதிகம் விரும்புவதற்கும் அவர்களை ஒரு ரோல் மாடலாக எடுத்துக் கொள்வதற்குமான ஒரு காரணம்.

வெற்றிகரமான நபர்களை நீங்கள் கூர்ந்து நோக்கினால் தெரியும்.
- அவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். தனது பேச்சால் தனது எண்ணங்களை விளக்க மாட்டார்கள். ஆனால் செயலில் காட்டுவார்கள்.

- பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பார்கள். அவ்வளவு சீக்கிரம் கோபப்படமாட்டார்கள்.

- அனைத்தையும் கூர்ந்து கவனிப்பார்கள். புதிய புதிய விடயங்களை உருவாக்குவதற்கு முனைப்போடு செயற்படுவார்கள்.

- எவ்வளவு வெற்றி பெற்றாலும் பணிவோடு இருப்பார்கள்.

- எவ்வளவு பணம் இருந்தாலும் எளிமையாக இருப்பார்கள்.

- ஆடம்பரம், பந்தாலாம் இருக்காது.

- இலக்கை அடைவதிலேயே அதிக கவனம் இருக்கும்.

- மற்றவர்கள் முன்னேற வழிவிடுவார்கள்.

தன்னை தாழ்த்தி கொள்வார்களே தவிர, பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள்.

நன்றாக ஊன்றிக் கவனித்தால் மொத்தத்தில் நாம் வளர்த்துக் கொள்ள நினைக்கும் அத்தனை அடிப்படைப் பண்புகளையும் ஏதோ ஒரு விதத்தில் வெற்றியாளர்கள் பிரதிபலித்துக் கொண்டிருப்பார்கள்.
































![[ம.சு.கு]வின் : நினைவாற்றலை அதிகரிக்க முடியுமா ? 1-3023c2e9](https://neermai.com/wp-content/uploads/2021/10/1-3023c2e9-100x70.jpg)