பாதையை மாற்றும் போதை

0
3203

வர்ண வகைப் போத்தல்
அதை உள்ளே விட்டால்
அவர்கள் எடுப்பதோ
பெறும் ஆத்தல்
புரியாத சொற்கள் தான்
புரிந்து கொள்ளதான் வேண்டும்.

கொண்டாட்டக் குடி
குதுகலமாய் இருக்க எடுப்பதோ
முதற் படி
கவலைக் குடி
கண்ணீருக்காகன உச்சப்படி
வட்ட மேசை, வசதிக் குடி
அலங்கார குடிஇ அதிகார குடி

விருந்திற்கு விருந்தினர் இன்று
விந்தைகள் பல புரிவான் என்று
வித விதமாய் போதைகள் இங்கு
போதனை செய்ய எண்ணுதடா
சில சோதனை கள் செய்ய தூண்டுதடா

சாதனை செய்யும் மனிதனை
சாகடிக்க வேண்டுமென
மதுவும் புது புத்தகம் என
மாதுவும் கரத்தில் ஏந்தி
நிற்பது ஆணுக்கு நிகர் பெண் என
நிருபனம் செய்வதற்காவா எனத் தெரியவில்லை?

வானத்தில் புகைமூட்டம் போதவில்லையன
வெண்குழல்வத்தியினை
சிவந்த குழல் உதட்டினிலே
புல்லாங்குழல் என
பற்றி ஊதிப் பரவச் செய்தது
வானமும் போதையாவதற்காகவா?
அதனால் தான் அதுவும் அழுகிறது
துயரத்தின் சினுங்கலைக் கண்டு.

பாசமிழந்து பணமிழந்து
பைத்தியக்காரியாய்.
அழைத்துத் திரிந்து
வேலைப்பார்த்து சேமித்த பணத்தின்
சில்லறையை
பொறுக்கியெடுத்து முந்தானியால்
முடிந்து வைத்து ருசி அறியாத
குடும்ப பசியை தன் நெஞ்சில்
சுமந்துக் கொண்டிருக்கிறாள் இல்லத்தரசி
துன்ப முகங் கொண்டு

காலையிலே விழித்தெழுந்து
காரசாரமாய் உடையணிந்து
காய்த்து வைத்த காப்பியினை
கண்டுக்காமல் அடியெடுத்துவைத்து
கடைவரை சென்று வருகிறேன்
என- கதறிச் சென்றவன்
அம்புயம் எட்டிப் பார்த்த பின்னும் அவனைக் காணவில்லை.
வீதிச் சாலையிலே விதவிதமாய்
அங்கம்புரலுகிறான் அயராத குடி வெறியினிலே.

நான்கு சக்கர வண்டியிலே
ஏறி- நய்யாண்டி
பண்ணிக் கொண்டு
நகர் புறம் சுற்றித் திரிந்து
நாழிகையை வீணாக்கி
நாம் இருவர்
நமக்கு ஏன்
மற்றொருவரென
மனமகிழ்ந்து சென்றவன்
தன் குணமிழந்து குப்பையில்
கிடக்கிறான் குணாதிசய மனிதன் என்று நினைத்துக்கொண்டு.

ஆசையெனும் போர்வையினை
போர்த்தி உறங்கும் நாம்
போதைதாம் தம் பாதையென
கனவுகளாய் கனா கான்கிறோம்.
கவலையை தரவில்லையா?


குடும்பம் எனும் கூட்டினிலே
போதையெனும் கள்ளிச் செடியை
விதைத்து விடாதீர்கள்
நாளடைவில் கள்ளிப்பாலும்
அமிர்தம் என தோன்றும்.
மதுவிலக்கு இருப்பின்
உலகமும் நல் ஒழுக்கமாய்
உயர்வு பெறும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments