பிரமித்துப் போகிறேன்

0
775
89792508_518540132427740_2573300041598894080_n

பிரமித்துப் போகிறேன்
வளர்ந்து கொண்டேயிருக்கும் வான்வெளியை
வகைவகையாய் கண்களால் அளவாதவர்களைப் பார்த்து

பிரமித்துப் போகிறேன்
கட்டில்லா காலவோட்டத்தில் பயணித்துக்கொண்டே
கடுகளவும் வரலாறு அறியாதவர்களைப் பார்த்து

பிரமித்துப் போகிறேன்
புத்தகங்களின் உலகின் இதுவரை
புகுந்திராதவர்களைப் பார்த்து

பிரமித்துப் போகிறேன்
ஆடியோயப்போகும் வாழ்வை
அதன் பாட்டில் வாழ்பவர்களைப் பார்த்து

பிரமித்துப் போகிறேன்
கம்யூனிசம் போன்ற வார்த்தைகளை
காதால் கூட கேட்டிடாதவர்களைப் பார்த்து

பிரமித்துப் போகிறேன்
வேட்கைகள் எதுவுமற்ற
வெறுமையான வாழ்வை கொண்டுசெல்பவர்களை பார்த்து

பிரமித்துப் போகிறேன்
அளவற்ற தொழிநுட்பத்தில் தொலைந்து கொண்டே
அமெரிக்க அமைவிடமேனும் அறியாதவர்களை பார்த்து

பிரமித்துப் போகிறேன்
அகண்ட பிரபஞ்சப் பெருவெளியின் எல்லையை
அறிந்திட முற்படாதவர்களை பார்த்து

மீண்டும் நான்
பிரமித்துப் போகிறேன்
பலர் பிரமித்துப் போய் நின்று கொண்டிருக்கிறார்கள்
என்னைப் போன்ற இன்னும் சிலரை பார்த்து….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments