புன்னகை

1
766

 

 

 

 

 

வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற
கடவுளின் அற்புதமான பரிசு

எதிரில் கடந்து போகிறவனையும்
எளிதில் நட்பு கரம் நீட்ட
உதவி செய்யும் ஓர் பாஷை

மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம்
மதம், நிறம், எண்ணத்திற்கு அப்பாற்பட்ட
ஓர் அழகிய இணைப்பு

தனித்து விடப்படும் தருணங்களிலே
தனக்குள் நேசம் கொடுக்க கூடிய ஓர் ஆசிர்வாதம்
விரிந்து கிடக்கும் இவ்வுலகை
உள்ளங்கையில் அடக்க செய்திடும்
ஓர் நேசக்கரம்

எதிரியையும் எதிர்த்து விடும் ஓர்வருடல்
இன்று பரிசாய் கொடுத்து பாருங்கள்
அது நட்பு வட்டத்தை இன்னும் நாளைவிரிக்கும்

அன்பு கடந்த அழகிய மொழியின் பிரவாகத்தில்
சிந்திச்சிதறும் ஓர் கவிதையை அணியுங்கள்

அது வெந்து தணியும் விசித்திரமான கோபங்களையும்
நொடி நிமிடங்களில் விழ வைத்து விடும்
விசேடமான சக்தி படைத்த ஓர் யுக்தியே…!!!

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உண்மை வரிகள்…