புலி (Tiger)

0
3556

  புலி (பாந்தெரா தீகிரிஸ் ), என்னும் பூனையினத்தைச் சேர்ந்ததாகும். பாந்தெரா இனத்தின் நான்கு “பெரிய பூனையினங்களில்” இதுவே மிகப் பெரியதாகும்.

  • இதன் பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா ஆகும். புலி உயர்நிலை ஊனுண்ணியும், ஆதிக்கமிக்க ஊனுண்ணியும் ஆகும்.கொழுத்த உடலும் திறனும் மட்டுமின்றி அவற்றின் உடலில் உள்ள வெள்ளையிலிருந்து ஆரஞ்சு வரையிலுள்ள நிறத்திலும், அதற்குப் பக்கத்தில் கருப்பு நிறத்திலும் உள்ள பட்டைப் பட்டையான வரிகளும் வெளிர் நிற அடிப்பகுதியுமே அவற்றின் நினைவுகூறத்தக்க முக்கிய சிறப்பம்சங்களாகும்.

பசி இல்லாதபோது மிருகங்களைக் கொல்வதில்லை சிங்கம். அதனால் சிங்கத்தைக் காட்டுக்கு அரசன் எனக் கூறுவார்கள். இருந்தாலும் கிழக்கு ஆசிய நாடுகளில் புலியே காட்டின் அரசன் என்று சொல்லப்படுகிறது. புலியின் நெற்றியில் 王 என்ற அடையாளம் இருக்கும். இது சீன எழுத்தில் அரசன் என்பதை குறிக்கும். வரலாற்றில் புலிக்கும், சிங்கத்திற்கும் இடையிலான சண்டைகளில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது. புலியின் சிறப்பு கருதி இந்திய அரசு தேசிய விலங்காக புலியை அறிவித்து கொண்டாடி வருகிறது.

  • நவீன புலிகளின் ஒன்பது உள்ளினங்களில் மூன்று அழிந்துவிட்டன மீதமுள்ள ஆறு உள்ளினங்கள் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில மிக ஆபத்தானவை.
  • முதன்மையான நேரடிக் காரணங்கள், சொந்த வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் வாழிடத்தைப் பகுதிகளாகப் பிரித்தல் மற்றும் வேட்டையாடுதல், வரலாற்றுப்படி முதலில் மெசபடோமியா மற்றும் கவுகசஸில் இருந்து தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வரை இருந்த இவற்றின் எல்லையானது தற்போது குறிப்பிடும் அளவுக்குக்  குறைந்துள்ளது.
புலி வகைகள்
  • சைபீரியன் புலிகள்
  • வங்கப்புலிகள் 
  • இந்தியசீனப் புலிகள் 
  • மலேயப் புலிகள் 
  • தென்சீனப் புலிகள் 
  • சுமத்திராப் புலி
அழிந்துவிட்ட கிளையினங்கள்
  • பாலி புலிகள்
  • காஸ்பியன்  புலிகள்
  • ஜாவாப் புலிகள்
Tiger

புலி இனங்களின் எண்ணிக்கை:

  •   பெங்கால்- 2000க்கும் கீழ்
  •    இந்தோ/சைனீஸ்- 750-1300
  •    சைபீரியன் – சுமார் 450
  •    சுமத்ரன்- 400-500
  •    மலையன் – 600-800

இந்தியா : அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ள நாடாக உள்ளது. புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 25 புலிகள் சரணாலயத்தை உருவாக்கியுள்ளது இந்தியா. 2007 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பில், இந்தியாவில் வனப் புலிகளின் எண்ணிக்கை தோராயமாக 1,411 என்று குறைந்துள்ளதாகச்  சொல்கிறது. அந்த அறிக்கையில் புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கு, சட்டவிரோதமாக வேட்டையாடுதலே காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

புலி தனித்து வாழும் மிருகம்: புலி தனக்கென்று ஒரு எல்லையை காட்டில் தீர்மானித்துக் கொள்கிறது. சிறுநீர் கழிப்பதன் மூலமும், மரங்களில் கீறல்களை உண்டாக்குவதன் மூலமும் மற்றப் புலிகளுக்கு தன்னுடைய எல்லைக் கோட்டை தெரியப்படுத்துகிறது. புலிகள் வாழ அடர்ந்த வனப் பகுதியும், நீர்த் தேவைகளும், மனித இடையூறுகள் அற்ற பகுதியும் தேவைப்படுகிறது. தனக்குக் கிடைக்கும் உணவின் தேவைகளைப் பொறுத்து (மான், காட்டெருமை, காட்டுப் பன்றி மற்றும் பல) தன்னுடைய எல்லைகளைத் தீர்மானிக்கிறது.

புலியின் தோற்றம்

புலியின் உடல் பழுப்பு கலந்த வெளிர் சிவப்பு நிற தோலை உடையது. உடல் முழுவதும் வெள்ளை மற்றும் கருப்பு நிற கோடுகள் விரவி கிடக்கும். இந்த கோடுகள் மனிதர்களின் கைரேகைகளை போன்றது. இது தன் உடலை புல்வெளிகளில் மறைத்துக் கொண்டு விலங்குகளை வேட்டையாட உதவுகிறது.

புலிகளின் இனப்பெருக்கம்

புலிகளின் இனப்பெருக்க மாதங்கள் நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை. இனப்பெருக்க காலம் 16 வாரங்கள். ஒருமுறைக்கு 3-லிருந்து 4 குட்டிகளை ஈனும். குட்டிப் போட்ட 8 வாரங்கள் வரை புலிக் குட்டிகள் தாய் புலிகளிடம் இருக்கும். இரண்டரை வருடங்களில் தாய் புலியை விட்டு வெளியே வந்துவிடும். புலிகள் தனிமையாக வாழும் பழக்கம் உடையது. அது வேட்டையாடுவதற்கு உகந்த, பரந்த இடங்களையே வாழ்வதற்கு தேர்ந்தெடுக்க கூடியது.

புலிகளின் வசிப்பிடம்

புலிகள் அனைத்துவித பருவநிலை காலங்களிலும் வாழும் தன்மை கொண்டது. செடி கொடிகள் அடர்ந்த காடுகள், மரங்கள் அடர்ந்த காடுகள், மாங்குரோவ் காடுகள், சதுப்பு நில காடுகள், புல்வெளிகளிலும் வாழும் தன்மை கொண்டது.

புலிகளின் உணவு

புலிகள் பெரும்பாலும்  மான்களை விரும்பி சாப்பிடும். அடுத்து காட்டு பன்றி, நீர் எருமை, கொம்பு மான்களை சாப்பிடும். இதோடு கரடி, நாய், சிறுத்தை, முதலை, மலைபாம்புகளையும் வேட்டையாடும் தன்மை கொண்டது. தண்ணீரில் நீந்தும் தன்மையுடையதால், நீருக்குள்ளும் வேட்டையாடும். விலங்குகளை வேட்டையாடும்போது முதலில் அதன் கழுத்தை கடித்து வேட்டையாடும் இயல்புடையது.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments