பொரித்த மிளகாய் சம்பல்

0
2163

தேவையான பொருட்கள்

தேங்காய் – பாதி

செத்தல் மிளகாய் – 10

சின்ன வெங்காயம் – 8

கறிவேப்பிலை – 1 நெட்டு  (விரும்பினால்)

உப்பு – தேவையான அளவு

பழப்புளி – 05 / எலுமிச்சைச்சாறு – தேவையான அளவு

செய்முறை :-

* செத்தல் மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணையில் (கருகாமல்) பொரித்து எடுக்கவும்.

*கிரைண்டரில் முதலில் பொரித்த செத்தல் மிளகாய்,உப்பு  போட்டு நன்றாக அரைக்கவும்.

* அடுத்து கறிவேப்பிலையையும் போடவும்.

* நன்றாக மிளகாய், கறிவேப்பிலை அரைபட்டு சேர்ந்ததும், தேங்காய்ப்பூ சேர்த்து அரைக்கவும்.

*இறுதியாக எலுமிச்சைச்சாறு அல்லது பழப்புளி (Tamarind) சேர்த்து நறுக்கிய வெங்காயத்துடன் அரைத்து வைத்துள்ள சம்பலுடன் நன்றாக பிசைந்து கொள்ளவும்

குறிப்பு : இதனை இடியாப்பம்,புட்டு, பாண் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments