வானவில்
ஏழ் வண்ணங்கள்
அறிந்த எனக்கு
மனிதனினுள் உள்ள
வண்ணங்கள்
அடையாளம்
தெரியவில்லை…
அனைவரும்
வித்தியாசமானவர்கள்…
உருவத்தால் அல்ல
உள்ளத்தால்…
ஒவ்வொரு
மனதிலும் இருப்பது
கரும் புள்ளி அல்ல
சூழப்பட்ட
கருமை…
கவனிக்கப்படாத
பெற்றோர்
முதியோர் இல்லத்தில்…
மதிக்கப்படாத
மனைவி விவாகரத்து
மன்றத்தில்…
வீசப்பட்ட
குழந்தைகள்
அனாதை
இல்லத்தில்…
ஏழைச் சகோதரம்
எங்கே ஓர்
இடத்தில்…
மனிதம் எங்கே…?
மானிடன் வாழும்
நோக்கம் என்ன…?
நல்லவர் என்பவர்கள்
கடலின் முத்தில்
புதைக்கப்பட்டு
விட்டனர் போலும்…
ஆனந்தத்துக்காய்,
செல்வத்துக்காய்,
பேராசைக்காய்,
மனோ இச்சைக்காய்,
சுயநலத்துக்காய்
அலவலாவித் திரியும்
மனிதர்கள் மட்டுமே
இங்கே…
மனிதம் தொலைத்து
பிணமாய் திரியும்
மனிதர் மட்டும்
இங்கே….
மனிதம் இறந்து
புதைந்து விட்டது…
நல்லவர் என்ற நாமம்
மறைந்து விட்டது…
மெய்மைகள்
புதைந்து விட்டது…
ஆமாம் மனிதம்
இல்லை
இவ்வையகத்து
மனிதர்களிடம்…