மானிடம் காக்கும் இயற்கை

0
756

 

 

 

 

 

 

மரங்களில் உண்டோ? மதங்களும் மார்க்கமும்
மறங்களைச் செய்யும் மானிட கூட்டமே
மண்ணில் சுயமாய் முளைத்த வளமும்
மலையும் சோலையும் கொழிக்கும் அழகும்

கடலும் காடும் கலையும் மேகமும்
கண்களைக் கவரும் பூமியின் வனப்பும்
ஐம்பெரும் பூதமாய் அகிலம் செழிக்க
ஐயம் இட்டது அனைவரும் வாழவே

முன்னோர் வாழ்வில் முழுதாய் ஆண்டு
முற்றும் எளிதாய் பசுமையில் இணைந்தது
பின்னோர் இன்று சிதைக்கும் அழிவில்
பிதற்றும் செயற்கை முடிவாய் நிலைத்தது

உணவாய் பூசித்து உடையாய்த் தரித்து
உயிரை காக்க வளியைக் கொடுத்தது
உலகை மீட்க உரமாய் அமைவது
உறவைப் பேணும் இயற்கையும் நண்பனே

செல்லும் பாதை நிலையாய் உயர்ந்திட
சேரும் நிலத்தின் ஆழம் உணர்ந்திடு
மீளும் வாழ்க்கை சூழும் இயற்கை
மீண்டும் காக்கும் மானுடர் விதியை…

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments