பொய்த்த கனவுகளை
நினைத்து
வருத்தமில்லை
எனக்கு
நறுக்கிப் போட்ட
நகங்களாய் அவை….
காலம்கடந்த பின்னும்
ஊமத்தை போல்
எட்டிப் பார்க்கும்
ஓர் கனவு….
வடிவையும்
வனப்பையும் தொலைத்து
பற்றாக்குறைகள்
பரிகாசிக்க
சுயம்வரம்
நடத்த ஏங்கும்
இன்னோரு கனவு
மேலைக்காற்றின் நஞ்சும்
வண்ணத்திரைகளின்
மயக்கமும்
பண்பாட்டை படுக்கையில்
போட்டிருக்க
கலாச்சாரத்தின்
காதுகளைத் துருவியெறிந்த
காதறுந்த செருப்புக்கூட
ரசனையுள்ள கனவு
காணுது….