மிளகு மோர்க்குழம்பு

0
1445

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு – 100 கிராம்

அரிசி – ஒரு டீஸ்பூன்

மிளகு – 20

கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்

மோர் – 250 மில்லி

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

Black pepper buttermilk curry
Black pepper buttermilk curry

செய்முறை:

  • வாணலியில் எண்ணெய் விட்டு மிளகை வறுத்துக்கொள்ளவும். மிளகுடன் அரிசி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சேனைக்கிழங்கை தோல் சீவி, பொடியாக நறுக்கி வேகவிடவும்.
  • மோருடன் உப்பு, அரைத்த மிளகு – அரிசி கலவை, வேகவைத்த சேனையையும் சேர்த்து, லேசாக கொதிக்க விட்டு… கடுகு, வெந்தயத்தை எண்ணெயில் தாளித்துச்  சேர்த்து இறக்கவும்.

நன்மைகள்:

  • மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.
  • மருத்துவம் நிறைந்த பொருளாகும்.
  • மிளகு நாம் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஓர் மருத்துவம் நிறைந்த பொருளாகும் இதை அண்டிபயோட்டிக் என்றும் சொல்லலாம்.
  • ஞாபக சக்தி – நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மாறாட்டம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments