யதார்த்தம்

0
1247

துன்பங்களாய் ஊசலாடும்
நினைவுகள்..🖤

நலமா என கேட்டு செல்லும் 
சோகங்கள்…🖤

சொல்லில் அடங்காத
கண்ணீர் துளிகள்…🖤

சொந்தமாய் போகும்
கோப தாபங்கள்..🖤

சற்றே தூரத்தில் 
இன்ப களிப்புக்கள்..🖤

அதை தட்டி பறிக்கும்
பொறாமை குரல்கள்…🖤

இனிப்பான இம்சைகள் 
இதமான இச்சைகள் 🖤

அத்தனையும் ஏற்றுக்கொள்ள
மறுக்கும் ஏமாற்றங்கள்…🖤

கண்களை நனைந்துச் செல்லும் 
கனமான கண்ணீர் துளிகள்🖤

காந்தமாய் சில காதல் சுவடுகள்
காணிக்கையாய் சில கலப்படங்கள்…🖤

வாழ்க்கையின் யதார்த்தமாய்
கொட்டிக்கிடக்கின்றன இவை அனைத்தும்🖤

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments