தூரல்
இல்லாப் பூமியில்
பழுத்துக்குலுங்கும்
மரத்துப்போன
மனிதம்
நா வறண்டு
தாகமெடுக்கையில்
சொட்டுநீர்
தந்து மகிழா
தரிசான மனங்கள்
முகம் கோணி
முறுவல் செய்து
சாடைகள் பேசும்
ஆறறிவில்
ஓரறிவு குறைந்த
மனிதர்கள்
உள்ளத்து குறுக்கத்தில்
உறவோடு பகை வளர்க்கும்
வற்றிப்போன ஈரத்தின்
அடையாளங்கள்
சிந்தை பிறண்டு
தன்னலம் கொண்டு
பொருள்சேர்க்கும் போட்டியில்
கருமியாய் வாழும்
தற்குறிகள்….
தரணியின் நலன்மறந்து
கருணையின் அளவுகோலை
உடைத்தெறிந்த
ஊன உள்ளங்கள்
வறுமை தேவதைக்கு
வண்ணம் தீட்டும்
வெறுங்கை வேந்தர்கள்
நாங்கள்….
ஈதலில்
துயர் துடைக்காது
போ’வென விரட்டும்
பொல்லாத சருகுகள்…
இவர்களை,
இரங்கலில்
மனங்கள் மாற
தவமிருக்கும்
புண்ணியங்கள்
இவர்கள்…