வறுமையின் ஓலம்..

0
834
pexels-photo-1098769

எண்ணற்ற உயிர்களைக் குடித்தும்
அடங்கா கிருமியே..
இன்னும் ஏன் ஆட்டிப்படைக்கிறாய்?
மனிதனை ஏன் முடக்கிவைத்தாய்?

என் தந்தையை இழந்த ஓலம்
கேட்கவில்லையா..
தாயை இழந்த கதறல்
கேட்கவில்லையா..

இரக்கமற்றவன் பணக்காரன் சாதிவெறியன்
குடி கொண்ட பூமியில் தானே..
இரக்கமுள்ள வறியனும் கிடந்து துடிக்கிறான்..
உன்னால் இறப்பதும் கொடுமை…
வறுமையால் வயிர் வாடி இறப்பதும் கொடுமை…

அன்றாடக்காட்சிகளாய் அலைந்தவர்களையும் புதைத்து விட்டாய்..
அவர்களின் சாம்பலையும் பறித்துக் கொண்டாய்..

மண்சட்டியில் என் கஞ்செங்கே..
பிடித்து குடிக்க மழையெங்கே..
பட்டினியோடு தனிமையும் வதைக்கிறதே..
ஓலைப்போர்வையும் ஓரமாய் கிழிந்து தொங்குகிறதே..
நிலவொளி வெளிச்சமும் எட்டிப்பார்க்கிறதே..
படும் ஒளியில் என் தாய் முத்தமிடுகிறாளா??
தந்தை அள்ளியணைக்கிறாரா??

கொடிய நெஞ்சிலும் இரக்கமில்லா கொடூரமே….
பார்த்துப் பார்த்து
அடங்காமல் ஆடுகிறாயே..
எத்தனை ஏழைக்குடிலை கண்ணீரில் நனைத்தாயோ….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments