வலி கொண்ட அவள் நாட்கள்

0
622

 

 

 

 

 

 

 

அவள் விம்முகின்ற
அந்த மூன்று நாட்களில்
வலிக்குள்ளே வாழப்
பிறந்தவள் போல
தோற்று விடுகிறாள் – அந்த
அனைத்து வலிகளிலும்
இருந்து…!!!

உண்மையில் பெண்ணவள்
சுமக்கும் வலிமை மிக
அழகே…

வர்ணணை கலந்த வலி
வலியால் கனக்கும் வயிறு
வயிற்றில் கணமாய் தோன்றும்
வலிகளின் மோதலினை
வரிகளில் தெளிவாய்
வடித்து விட முடியவில்லை

கனமான கணங்களால்
ஆன – அந்த நிமிடங்கள்
மாதத்தின் மூன்று நாட்கள்
அவள் மீது படையெடுக்கும்

பதட்டம் எட்டிப்பார்க்க
பசி அவளை துரத்த
அயர்ச்சியில் களைப்புற்று
கழித்து போகும் அந்த
முதல் நாள் அத்தனை
வேதனைகளை உடலில்
சுமந்திருக்கும்

காரமாய் கோபம் அவள்
மேல் காதல் கொள்ள
நேசமாய் எரிச்சலும
அவளை கைது பண்ண
திக்குத்திசை தெரியாது
திணரிப்போகும் நிமிடங்களாய்
கடத்துவாள் அந்த
இரண்டாம் நாளினை

வலி தாங்கவென்று
#வரம் ஒன்று வாங்கிட
வதனம் இழைத்தபடி
வண்ண கடவுள்
வணங்கச் செல்லவும்
வகைவகையான மறுப்புகள்
வரிசையில் நிற்குமந்த
மூன்றாம் நாளையும்
கடந்திடுவாள் அழகாய்

அந்த நாட்களில்
அவள் வேலைகளை
கொஞ்சம் கடன்வாங்கி
கரிசனை காட்டும் அந்த
சிலரை விடவும்
கதைகள் சொல்லி அவளை
தட்டிக்கழிக்கும் பலர் தான்
இங்கு அதிகமாய்

#வலிகள் தாங்கும் சக்தி
படைத்த வல்லரசு அவள்
வரிகளால் வடிக்க முடியாத
கவிக்கிறுக்கல் அவள்
இறக்கை இல்லாத அழகிய
தேவதை அவள் – தூரிகை
இல்லா அழகிய ஒவியமும்
அவளே…

இனியேனும்
அந்த நாட்களில்
கொஞ்சம்
#அவளுக்காய்
#அவளோடு
#அவளிடத்தே
#அவள்_மேல்
#அன்பாய்
இருந்து விடுங்கள்

அவளை
அவளாயும்
விட்டு விடுங்கள்,,,,!!!

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments