விழிதிறந்து பார்!

0
588
8738690601_b7c5f95db8_b

அதிகாலை வானெட்டி
முத்தமிடும் சூரியன்,

பந்தயக் குதிரையாய் விரைந்து
மறைந்து போகும் இருள்,

பாய்விரித்துப் படுத்துறங்கும்
பச்சைப் புல்லினங்கள்,

புல்வெளியின் மடிதனில்
முடங்கிக்கிடக்கும் பனித்துளி,

வெட்கத்தைச் சிந்திச்செல்லும்
பெண்ணினத் தென்றல்,

மெல்லிசை கீதம்பாடி
பறந்து செல்லும் பறவை,

முணுமுணுத்துக்கொண்டு
தத்தளிக்கும் நீரோடை,

தனிமையின் நிழலில்
ஓய்வெடுத்துக்கொள்ளும் ஒற்றை மரம்,

முகம் திறந்து புன்னகைக்கும் மலர்கள்,

மனம் விரும்பி அசைந்தாடும் இலைகள்,

எங்கும் செல்ல முடியாமல்
இறுமாப்பாய்க் கிடக்கும் மலைகள்,

யாரின் மீதோ ஏக்கங்கொண்டு
இருளடையும் முகில்மூட்டம்,

யாரின் மீதோ தாகங்கொண்டு
சிந்தும் மழைக்கூட்டம்,


யாரின் மீதோ மோகங்கொண்டு
புறப்படும் மண்வாசனை,

ஆங்காங்கே ஒளி-பரப்பும்
விண்மீன்கள்,

அவசரப்பட்டு எரிந்து விழும்
எரிகற்கள்,

வானின் மடியில் நிலா,
நிலவின் முதுகை மறைக்கும் இரவு

இவையனைத்தும் இயற்கையின்
விழிதனில் அழகே!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments