நீர்மை வலைத்தளத்தின் இலக்கிய கொண்டாட்டத்தில் பங்குபற்றிய எண்ணற்ற போட்டியாளர்களுக்கிடையில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் மற்றும் சிறப்பு படைப்புகளின் எழுத்தாளர்கள் என தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நீர்மை வலைத்தளத்தின் மூலம் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் அனுப்பிவைக்கப்பட்டன. எங்களுடன் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட எழுத்தாளர்களின் விபரங்களை பிரசுரிக்கின்றோம். மேலும் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் மின்சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு போட்டியில் பங்குபற்றி சிறப்பித்த அனைவருக்கும் நீர்மை வலைத்தளம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
எழுத்தாளர் கௌரிசங்கர்
நீர்மை வலைத்தளத்தில் வஞ்சிமறவன் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இளம் எழுத்தாளர். ஜுன் மாத இலக்கியக் கொண்டாட்ட கதைப்பிரிவின் வெற்றியாளர். எந்தவொரு கதைக்களத்திலும் எழுதக்கூடிய ஆற்றலுடையவர். த்ரில்லர், மற்றும் விஞ்ஞான புதினக்கதைகளை எழுதி தனக்கென தனி வாசகர்களை உருவாக்கிக்கொண்டவர். புதிய வளர்ந்துவரும் இளம் படைப்பாளிகளுக்கு இவர் ஒரு சிறந்த உதாரணம். இவரது திறமைகள் மென்மேலும் சிறக்க நீர்மை வலைத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
எழுத்தாளர் அலியார் முஹம்மது அஹ்ஸான்
ஓடைக்கவிஞன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதிவரும் இவர் பல அழகான கவிதைகளுக்கு சொந்தக்காரர். நீர்மை வலைத்தளத்தின் ஆரம்பம் தொடக்கம் தற்போது வரை பல படைப்புக்களை படைத்து தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிய ஒருவர் எழுத்தாளர் அலியார் முஹம்மது அஹ்ஸான். இவரது திறமைகள் மென்மேலும் சிறக்க நீர்மை வலைத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
எழுத்தாளர் றசீட் பாத்திமா முஜாமலா
வானம்பாடி தன் குரலால் மகிழ்விப்பதைப்போல தன் எளிமையான அலட்டலில்லாத எழுத்து நடையால் தன் உணர்வுகளை சொல்லும் வானம்பாடிதான் எழுத்தாளர் றசீட் பாத்திமா முஜாமலா. எண்ணற்ற கவிதைகளுக்கு சொந்தக்காரி. இவரது ஒவ்வொரு கவிதையிலும் சொல்லப்படாத சோகமும் ஏக்கமும் எப்போதும் துளிர்விட்டுக் கொண்டேயிருக்கும். இவரது திறமைகள் மென்மேலும் சிறக்க நீர்மை வலைத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
எழுத்தாளர் சிறீகர்ஷன்
நீர்மை வலைத்தளத்தின் போட்டியின் தொடக்கத்தில் அறிமுகமானவர். சீடன் எனற புனைப்பெயரில் படைப்புக்களை பதிவிட்டு வருகிறார். கதைகள், கவிதைகளை புதிய வடிவங்களில் பகிர்வதில் ஆர்வமுள்ள ஓர் இளம் வளரும் எழுத்தாளர். இவரது திறமைகள் மென்மேலும் சிறக்க நீர்மை வலைத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
எழுத்தாளர் சன்பரா
ஆனியாஹ் எனற புனைப்பெயரில் படைப்புக்களை படைத்து வரும் இவர் பன்முகம் கொண்ட ஒரு படைப்பாளி. கவிதைகள் கதைகள் என படைப்புக்களை பதிவிடுபவர். புனைகதைகள் மூலம் நம்மை வேறுஉலகிற்கு கடத்திச்செல்லும் கண்கட்டு வித்தை செய்யும் ஆற்றல் இவரது எழுத்துகளுக்கு உண்டு. அறிவியல் கதைகள் மூலம் வேறு விதமாக சிந்திக்கச் செய்பவர். நாவல்கள் மற்றும் கதைகள் புனைவதில் தனக்கன ஒரு தனி இடத்தினை பிடித்திருக்கும் எழுத்தாளர் சன்பரா மென்மேலும் சிறக்க நீர்மை வலைத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
எழுத்தாளர் உமர் அலி பானு பாத்திமா
மாந்தாரி என்ற புனைப்பெயரில் வித்தியாசமான பாணியில் கதை சொல்லுபவர். இவரது கதைகளில் எப்போதும் ஓர் இளமைத்துடிப்பு இருக்கும். கனவுகளின் வழி வாழ்வியலை கடத்திச் செல்லும் கதையோட்டம் இவரது படைப்புகளுக்கு உண்டு. எப்போதும் இவரது படைப்புகளுக்கென தனி வாசகர்கள் உண்டு. இவரது திறமைகள் மென்மேலும் சிறக்க நீர்மை வலைத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
எழுத்தாளர் ஆதம் அமீருன் நிஸா
நீர்மை வலைத்தளத்தில் ஆதம் நிஸா என்ற பெயரில் எழுதிவரும் இளம் எழுத்தாளர். இவரது கவிதைகள் பெரும்பாலும் நீண்ட வரிகளைக்கொண்ட நெடிய கவிதைகளாக இருந்தாலும் வாசகர்களை கவரக்கூடியவை. இவரது படைப்புகளுக்கு எப்போதுமே அதிக பார்வைகள் உண்டு. வாழ்வியலின் எதார்த்தங்களை தனது வரிகளில் சொல்பவர். ஜுன் மாத இலக்கியக் கொண்டாட்ட கவிதைப்பிரிவின் வெற்றியாளர். புதிய வளர்ந்துவரும் இளம் படைப்பாளிகளுக்கு இவர் ஒரு சிறந்த உதாரணம். இவரது திறமைகள் மென்மேலும் சிறக்க நீர்மை வலைத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
வாழ்த்துக்கள் Authors and neermai team
உங்களின் ஊக்கப்படுத்தும் செயலுக்கும் , வளர்ந்து வரும் எழுத்தாளர்களை நெரிப்படுத்தும் பணிக்கும் மிக மிக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.நீர்மை.Com மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.