சிரிப்பும் சோகமும்
இரண்டறக் கலந்து
ஓர் உணர்வை
பிரசவித்து,
வெறுமையாய்
இந்த வாழ்க்கையில்,
குழப்பங்கள் குவிந்து
குவியமாய் ஒரு
விம்பத்தை
தோற்றுவித்து,
ஓர் ஒற்றைப்
பாதையில்
தூரத்தில்
குருட்டு வெளிச்சத்திற்காய்
போலிப் புன்னகைக்குள்
சோகங்களை
அடக்கம் செய்து
வெல்ல வழியற்று
சுவையற்றுப் போய்
நடித்து வாழ்ந்து,
சாதிப்பது என்னவோ…?
கேள்விக் குறி தான்
நாற் சுவர் நோக்க,
கூரையும்
வேடிக்கை பார்க்க,
இருட்டறையினுள்
நினைப்பதெல்லாம்,
பெண்ணாய்
பிறப்பெடுத்து
பூவினும் மேல்
மென்மை பொறுத்தியது
கண்ணீர் எனும்
வேர்வைத் துளி
சிந்த தானோ…?
கணவன்
கொடுமையை
வெளிச் சொல்ல
முடியாமல்
நொந்து போக
தானோ…?
பொறுமையுடன்
அவள் வெளிச்சம்
தேடும் அந்த
இருட்டறைக்குள்
எஞ்சியது
நம்பிக்கை மட்டுமே…!
அவளின் அமுதமாய்
உணவளிப்பது
கணவன் மாறி
விட வேண்டும் என்ற
பிரார்த்தனை மட்டுமே…!