ஹலோ

0
312

 

எத்தனையோ ஹலோக்களுக்குப் பிறகு
இப்போது கேட்கும் ஹலோக்கள் அத்தனை உயிர்ப்பாய் இல்லை
சொல்லு
ம் கேட்குது
என்ன விஷயம்?
அவசரமா பேசணுமா?
இப்போதெல்லாம் ஹலோக்கள் இத்தனை கேள்விகயோடு மட்டுமே ஆரம்பிக்கின்றன
சிறிது நேர இடைவெளிதானே
ஒவ்வொரு நாளின் 08 மணிநேரத்தின் மிகுதியில் சந்திப்புக்கள்தானே
பொறுப்புகளின் முதுகிற்குப் பின்னால் இப்போது காதலும் வசதியாக ஒழிந்து கொள்கின்றது
மிகப்பெரும் உயரத்திலிருந்து தவறி விழுவதற்கு முன்னான கரப்பற்றுகையினை
கழித்துணர்த்தும் காதலின் ரகசிய விழிப்புதான் என்ன
மெதுவாய் மெது மெதுவாய்
தாழிட்டுக்கொள்ளும்
நேசத்தின் அடைப்புகளில்
இரும்பின்மேல் பீடித்துக்கொள்ளும் துருவாய்
தொலைவாகிவிடும் நாம் காதலித்த நாட்களை மீட்டிப்பார்க்கவேனும்
தூரமாய் சில நாட்கள் தனியே தங்கியிருந்து
மீண்டும் பார்க்க முடியா தொலைவிலே
மீட்டிப்பார்ப்போம்
நாம் தொலைத்த ஹலோக்களின் தாபங்களை அன்பே…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments