விரல் நுனி குறித்த அதிசய தகவல்கள்!

0
1480
 
நாம் தினமும் விரல்களை பயன்படுத்தி பல வேலைகளை செய்கிறோம். அதிலும் குறிப்பாக விரல் நுனிகள் தான் நாம் செய்யும் வேலைகளில் பெரும் பங்காற்றுகின்றன. அவற்றின் மகத்துவம் என்னவென்று தற்போது தெரிந்து கொள்ளலாம்.
 
விரலின் எலும்புகள் நகம் முடியும் வரை செல்லாமல், நகத்தின் பாதியிலேயே நின்று விடுகின்றன. இதனாலேயே நம்மால் வேகமாக பணம் எண்ண முடிகிறது. முழு நீளமும் எலும்பு இருந்தால் இத்தனை வேகமான பணம் எண்ணுவது கடினம்.
 
நாம் வளர, வளர விரல் நுனியின் செயல்திறனும் நம்முடன் சேர்ந்து வளர்கின்றன. சிறு வயதில் விரல் நுனியால் செய்த வேலைகளை வயது ஆக ஆக நேர்த்தியாக செய்வோம். உதாரணமாக சிறு வயதில் பென்சில், சாக்பீஸை எல்லாம் எளிதில் உடைத்துவிடும் நாம் பின்பு அப்படி செய்வதில்லை.
 
 
நம்முடையை திறன் வளர்ந்தாலும் விரல் நுனி பெரிதாகாது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் கல்லீரல் பிரச்னை உள்ளவர்களின் விரல்கள் தான் வீங்கி பெரிதாக காணப்படும்
ஒவ்வொரு விரல் நுனியும் உணர்ச்சி மிகுந்தது. அதனாலேயே ரத்தப்பரிசோதனை செய்யும் போது விரல் நுனியில் ரத்தம் எடுக்கின்றனர்.
 
கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்கள் ஒப்பீட்டு அளவில் அதிக அளவில் உணர்வுகளை மூளைக்கு அனுப்பும் திறன் உடையவை. இதனால் தான் நாணயங்களை தொட்டுப்பார்த்து எளிதில் கண்டறியமுடிகிறது. விரல் நுனியில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் புண் பெரிதாகி விரல் முன்போன்ற உணர்வு திறனை இழக்கும் நிலை ஏற்படும்
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments